ADDED : அக் 22, 2026 12:54 PM

அ நிறம் | அளவு
வடலுாரில் அமாவாசை என்றொரு கூலியாள் இருந்தார். கறவை நின்ற மாடுகளை வெட்டுவது அவரது தொழில். வள்ளலாரின் அருளுரையைக் கேட்டு மாடு அறுக்கும் தொழிலைக் கைவிட எண்ணினார். இதை அறிந்த வள்ளலார், “அமாவாசை! உன் அன்றாட வருமானம் எவ்வளவு?” எனக் கேட்டார்.
“சொற்பம் தான்! தினமும் எட்டணா (ஐம்பது பைசா) கூலி வாங்குறேன்” என்றார்.
எட்டணா நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்த வள்ளலார், “இதை பத்திரமாக வைத்துக் கொள். இனி விவசாயத்தில் ஈடுபடு. உழைப்பிற்கான ஊதியம் உனக்கு கிடைக்கும்'' என ஆசியளித்தார். அதன் பின் அமாவாசை உயிர்கள் மீது அன்பு காட்டியதோடு, விவசாயத்தில் ஈடுபட்டு நிம்மதியாக வாழ்ந்தார்.
