தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/விதியை வெல்லலாம்

விதியை வெல்லலாம்

விதியை வெல்லலாம்


ADDED : நவ 26, 2026 10:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரை பார்க்க வரிசையில் காத்திருந்தார் ஒருவர். அவரை கவனித்த மஹாபெரியவர், 'சிலர் வெளிமுகமாகவும், இன்னும் சிலர் உள்முகமாகவும் கடவுளை தரிசிக்கின்றனர். அதோ அந்த துாணுக்கு கீழே நிற்கிறாரே, அவர் உள்முகமாக கடவுளைத் தேடி அவரது அருளை பெற்றவர்' என சுட்டிக்காட்டினார்.

அவர்தான் யோகிராம் சுரத்குமார் என்னும் அருளாளர். ரமணர், சேஷாத்ரி சுவாமியைப் போல் திருவண்ணாமலையில் வாழ்ந்த இவரை 'விசிறி சாமியார்' என அழைத்தனர்.

கங்கைக்கரையில் நர்த்தரா என்ற ஊரில் வசித்த ராம்தத்குன்வர் குஸும்தேவி தம்பதிக்கு டிச.1, 1918ல் பிறந்தவர் ராம்சுரத்குன்வர். 'ராமன் மீது அன்புள்ள குழந்தை' என்பது இதன் பொருள். சிறுவயதில் இவர் குருவி ஒன்றின் மீது விளையாட்டாக கயிறை வீச, அது கயிறின் பாரம் தாங்காமல் உயிரை விட்டது. இந்த சம்பவம் ராம்சுரத்குன்வரை பெரிதும் பாதித்தது. அப்போது பிறப்பு, இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பித்தது அந்த பிஞ்சு மனம். இதற்கு விடை தேட காசிக்கு சென்றார். பின் திருவண்ணாமலை புண்ணிய பூமி குறித்து கேள்விப்பட்டார். உடனே இங்கு வந்தவர் குருநாதரின் மூலம் அந்த ரகசியத்தை அறிய விரும்பினார்.

இதற்காக ரமணரையும், புதுச்சேரியில் அரவிந்தரையும் சந்தித்தார். பின் கேரளாவில் பப்பாராம்தாஸ் சுவாமியிடம் சென்றார். அவர், 'ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதை வீட்டுக்கு சென்றதும் இடைவிடாமல் உச்சரித்தார் ராம்சுரத்குன்வர்.

ராமநாமம் ஜபம் செய்ய செய்ய அவருக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. தன்னை தனக்குள்ளேயே உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.

ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கடவுளோடு பிணைப்பு உறுதியானது. தன்னை ஒரு பிச்சைக்காரன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். கையில் ஒரு கொட்டாங்குச்சியும், (தேங்காய் சிரட்டை) விசிறியும் வைத்துக் கொண்டார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும், சாலையோரத்திலும் தங்கி அற்புதங்களை செய்தார். இதனால் பக்தர்களின் கூட்டம் பெருகியது.

இவர் முக்தி பெற்ற இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே இன்று யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமம் செயல்படுகிறது. அங்கு செல்பவர்கள் மனதிற்குள் நிம்மதி பரவுவதை உணரலாம்.

உபதேசம்

* மனதில் நம்பிக்கை உறுதியாக இருந்தால் விதியை வெல்லலாம்.

* மனதை சுத்தமாக வைத்திரு. அப்போது கடவுளை காண்பாய்.

* உடலை பலப்படுத்துவதால் மட்டும் பயனில்லை. உன் ஆன்மாவை பலப்படுத்து.

* நம்பிக்கை பலமாக இருந்தால் வெற்றி பெறுவது உறுதி.

* செடியின் வேரில் ஊற்றப்படும் தண்ணீரே இலையாகி, பூவாகி, பழம் தருகிறது. அதுபோல் துறவிக்கு செய்யும் சேவை மனித குலத்திற்கே பலனளிக்கும்.

* உன்னை யார் துன்புறுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் அவர்களை நேசி.

* அன்பு வலிமையான மருந்து. அது மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது.

* பிறரை நேசித்தால் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us