ADDED : மே 30, 2025 08:35 AM

வெற்றி அருளும் விஜய கணபதி
தடைகளை நீக்கி இறையருளோடு கூடிய வெற்றியை அருளுவதால் இவர் விஜய கணபதி என போற்றப்படுகிறார்.
தியான சுலோகம்
பாசாங்குச ஸ்வதந் தாம்ர பலவாந் ஆகு வாஹந: |
விக்நம் நிஹந்து நஸ் ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக: ||
பாசம் - பாசம் எனும் ஆயுதம்
அங்குச - அங்குசம் எனும் ஆயுதம்
ஸ்வதந்த - தனது ஒடித்த தந்தம்
ஆம்ர - மாம்பழம்
பலவாந் - இவற்றை ஏந்தியிருப்பவரும்
ஆகுவாஹந: - பெருச்சாளியை வாகனமாக உடையவரும்
ரக்தவர்ண: - குருதி போன்ற சிவந்த நிறம் கொண்டவருமாக
விநாயக: - தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத விநாயகராக (விளங்குபவர்)
ந: - எங்களுடைய (பக்தர்களுடைய)
ஸர்வம் விக்நம் - அனைத்து தடைகளையும்
நிஹந்து - அழிக்கட்டும்
பாசம், அங்குசம் : உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்.
ஒடித்த தந்தம் : துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.
பெருச்சாளி : உயிரை மூடியுள்ள ஆணவ மலத்தைக் குறிக்கும். சரணடையும் உயிரின் ஆணவத்தை அடக்கி வீடுபேற்றை அருள்பவர் கணபதி என்பதை உணர்த்துவது.
மாம்பழம் : இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பலன் : வெற்றி கிட்டும்; பிறவாத நிலையான வீடுபேறு கிடைக்கும்.
அருள் தொடரும்
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்