sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 19

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 19

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 19

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 19


ADDED : ஜூலை 03, 2025 01:30 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்திரசித்தி அருளும் த்ரயாக்ஷர கணபதி

சக்தியைப் பரம்பொருளாக வழிபடும் சாக்தசமயத்தில், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம் பீஜங்களும் த்ரயக்ஷரம் (மூன்று எழுத்துக்கள்) என்று போற்றப்படுவன.

சாக்தப் பிரணவம் என்றும் அழைக்கப்படும். இவற்றில், ஐம் - சரஸ்வதி தே பராசக்தியையும், ஸ்ரீம் - லட்சுமி தேவியையும் குறிப்பன. 'ஸசாமர ரமாவா சேவிதா' என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியைப் போற்றுகிறது. சரஸ் இருபுறமும் இருந்து சாமரம் வீச, நடுவில் லலிதாம்பிகை எழுந்தருளி நாமாவளி உணர்த்துகிறது. அதேபோல், சரஸ்வதி, லட்சுமியின் பீஜங்கள் | நடுவில் பராசக்தியின் பீஜம் உள்ளது. இம்மூன்று பீஜங்களின் ஒரே வடிவ எழுந்தருளியிருக்கிறார் என்பது இதன் பொருள்.

தியான சுலோகம்

கஜேந்த்ர வதநம் ஸாக்ஷாத் சலத்கர்ண ஸுசாமரம் |

ஹேமவர்ணம் சதுர்பாஹும் பாசாங்குசதரம் வரம் ||

ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் ததா' |

புஷ்கரே மோத'கஞ்சைவ தா'ரயந்தம் அநு ஸ்மரேத் II

ஸாக்ஷாத் க ஜேந்த்ர வத நம் - கண்ணால் காணும் வகையில் உள்ள யானையின் முகம் போன்ற முகத்தைக் கொண்டவராகவும்

சலத்கர்ண ஸுசாமரம் - சாமரம் போன்று அசைகின்ற இருபெரு கொண்டவராகவும்

ஹேமவர்ணம் - பொன்னிறத் திருமேனியை உடையவர

சதுர்பாஹும் - நான்கு திருக்கரங்களை உடையவராகவும்

பாச அங்குச தரம் - பாசம், அங்குசங்களை தம் பின்னிரு கைகளில் ஏந்தியவராகவும்

வரம் - வரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் சிறந்து விளங்கும் வரதராகவும்

தக்ஷிணே ஹஸ்தே - வலது கையில்

ஸ்வதந்தம்- தனது ஒடித்த தந்தத்தை ஏந்தியவராகவும்

ஸவ்யே து - இடது முன்கையிலோ

ஆம்ரபலம் - மாம்பழத்தை வைத்திருப்பவராகவும்

ததா - அவ்வாறே தனது ஐந்தாவது கரமான

புஷ்கரே - துதிக்கையில்

மோத கஞ்சைவ - மோதகத்தையும்

தாரயந்தம் - ஏந்தியிருப்பவராகவும் உள்ள த்ரயக்ஷர கண

அநுஸ்மரேத் - நினைக்க வேண்டும்.

பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.

ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையையும் ஆயுதமாக ஏந்தியதால் மனஉறுதியையும் கொண்டு, செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது

அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.

மாம்பழம்: இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மோதகம்: இனிப்பானது. உயிர்களுக்கு நிரந்தர இன்பமான வீடுபேற்றைத் தருபவர் கணபதி என்பதை உணர்த்துவது.

பலன்: சர்வ மந்திர சித்தி, விரும்பிய பயன் கிடைக்கும்.



அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us