ADDED : செப் 05, 2025 07:47 AM

பிறப்பிலாப் பெருவாழ்வு அருளும் த்ரிமுக கணபதி
ஓம் எனும் பிரணவத்தில், அகாரம், உகாரம், மகாரம் எனும் மூன்று எழுத்துகள் உள்ளன. இம்மூன்று எழுத்துக்கள், மும்மூர்த்திகள், மூன்று வேதங்கள் ஆகியவற்றை குறிக்கும் விதத்தில், மூன்று முகங்களோடு காட்சியளிப்பவர் தரிமுக கணபதி. இவரை வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
தியான சுலோகம்
ஸ்ரீமத்தீக்ஷண சிகாங்குசாக்ஷ வரதாம் தக்ஷே ததாந: கரை:-
பாசஞ்சாம்ருத பூர்ணகும்பம் அபயம் வாமே ததாநோ முதா |
பீடே ஸ்வர்ணமயா ரவிந்த விலஸத் ஸத்கர்ணிகா பா'ஸுரே-
ஸ்வாஸீநஸ் த்ரிமுக: பலாச ருசிரோ நாகாநந: பாது ந:||
தக்ஷே - வலது பக்க
கரை: - கைகளினால்
ஸ்ரீமத்தீஷ்ண - தீக்கொழுந்து போன்று
சிகாங்குச் - பொலிவுடன் மிளிரும் அங்குசத்தையும்
அக்ஷ - ஜபமாலையையும்
வரதாம் - வரத முத்திரையையும்
ததா'ந: - வைத்திருப்பவரும்
வாமே - இடதுபக்கத்தில் (உள்ள கைகளினால்)
பாசம் - பாசக் கயிற்றையும்
அம்ருதபூர்ண - அமுதம் நிறைந்த
கும்பம் - கலசத்தையும்
அபயம் - அபய முத்திரையையும்
முதா - மகிழ்வோடு
ததாந: - வைத்திருப்பவரும்
ஸ்வர்ணமயாரவிந்த - தங்கத் தாமரையால் அமைந்ததும்
விலஸத் - பிரகாசிக்கின்ற
ஸத்கர்ணிகா - சிறந்த நடுவில் உள்ள தாமரையின் காய்ப்பகுதியுடன்
பா'ஸுரே - (பொன் நிறத்தில்) ஒளிவீசுகின்றதுமான
பீடே - இருக்கையில்,
ஸ்வாஸீந: - நன்கு அழகுற அமர்ந்திருப்பவரும்
த்ரிமுக: - மூன்று வேழ முகங்களையும் உடையவருமான
பலாச ருசிர: - புரசம்பூப் போன்று பொலியும் சிவப்பு நிறத் திருமேனியருமான
நாகாந்த: - யானையின் முகம் போன்ற மும்முகம் உடையவருமான மும்முகக் கணபதியானவர்
ந: - எங்களை
பாது - காக்கட்டும்.
அங்குசம்: புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்.
ஜபமாலை: இறைவனின் மறைப்பாற்றலைக் குறிப்பது.
பாசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம்.
அமுத கலசம்: பிறப்பில்லாப் பெருவாழ்வைக் குறிப்பது.
வரதம்: உயிர்கள் வேண்டும் வரங்களை அருள்பவர் கணபதி என்பதைக் குறிப்பது.
அபயம்: உயிர்களின் பயங்களை நீக்குபவர் கணபதி என்பதைக் காட்டும் முத்திரை.
பலன்: பிறப்பிலாப் பெரும்பேறு கிட்டும்; மும்மல நீக்கம்; போகம், மோட்சம் இரண்டும் கிட்டும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்