sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 32

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 32

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 32

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 32


ADDED : அக் 02, 2025 11:50 AM

Google News

ADDED : அக் 02, 2025 11:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கடங்கள் நீக்கும் சங்கடஹர கணபதி

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லை, இன்னல், சிக்கல் என்று பொருள். சங்கடங்களை நீக்குபவர் இந்த கணபதி.

தியான சுலோகம்

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்த சோபாட்யாம்| தக்ஷேங்குச வரதாநம் வாமே பாசஞ்ச பாயஸம் பாத்ரம் நீலாம்சுக லஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்- ஸங்கடஹரணப் பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்II

பாலார்க - இளஞ்சூரியன் போன்று

அருண காந்தி: - ஒளிரும் சிவந்த நிறத்தவரும்

வாமே - இடதுபக்கத்து

அங்கே - மடி மீது

லஸத் - பிரகாசிக்கின்ற

இந்தீவரம் - கருங்குவளைப் பூவை (நீலோத்பலத்தை)

ஹஸ்தாம் - தனது கையில் ஏந்தியவளாயும்

கௌராங்கீம் - வெண்ணிறத்தவளாயும்

ரத்ன சோபாட்யாம் - ரத்தினங்களின் ஒளியுடன் விளங்குபவளாயும் இருக்கின்ற

பாலாம் - இளந்தேவியை

வஹன் - தாங்கியிருப்பவராக (இவரது)

தக்ஷே - வலதுபக்க (இரு கைகளில்)

அங்குச - அங்குசம் எனும் ஆயுதத்தையும்

வரதாநம் - வரத முத்திரையையும்

வாமே - இடதுபக்க (இரு கைகளில்)

பாசம் - பாசம் எனும் ஆயுதத்தையும்

ச - இவற்றோடு

பாயஸ பாத்ரம் - பாயச பாத்திரத்தையும் (ஏந்தியிருப்பவரும்)

நீலாம்சுக: - நீலநிறப் பட்டாடையை அணிந்தவரும்

லஸமாந: - நன்கு பிரகாசிப்பவரும்

பத்மாருணே - செந்தாமரை வடிவமான

பீடே - இருக்கையில்

திஷ்டந் - நின்ற நிலையில் இருப்பவருமான

ஸங்கடஹரண: - சங்கடத்தை நீக்குபவரான

கஜாநந: - யானை முகமுடையவரான சங்கடஹர கணபதியானவர் (நம்மை)

ஸங்கடபூகாத் - சங்கடங்களாகிய கூட்டத்தில் இருந்து

பாயாத் - பாதுகாக்கட்டும்

தேவி: விநாயகப் பெருமானின் திருவருள்.

அதாவது சக்தி. இருவரும் பிரிக்க முடியாதவர்கள்.

வரதம்: உயிர்கள் வேண்டும் வரங்களை அருள்பவர் கணபதி என்பதைக் குறிப்பது.

அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது

பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.

பாயசம்: உயிரின் பக்குவ ஞானத்தையும், இறைவனின் அருளையும் குறிக்கும்.

பலன்: சங்கடங்கள் நீங்கும்; கேட்கும் வரம் கிடைக்கும்; பாதுகாப்பு ஏற்படும்.



அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us