sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 11

/

அசுர வதம் - 11

அசுர வதம் - 11

அசுர வதம் - 11


ADDED : ஜன 05, 2024 10:45 AM

Google News

ADDED : ஜன 05, 2024 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமுச்சி வதம்

பிரஜாபதி தட்சனின் மகள்களான அதிதி, திதி, கத்ரு, வினதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா, விஸ்வா ஆகிய பதின்மூன்று பெண்களைக் காசியப முனிவர் திருமணம் செய்து கொண்டார். இதில் காசியப முனிவருக்கும் தனுவிற்குப் பிறந்தவர்கள் தானவர்கள் எனப்பட்டனர்.

அசுரர் கூட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அஷ்டமாசித்தி என்னும் எட்டுவித மாயா சக்திகளைப் பெற்றிருந்தனர். இதனால் மாயா அசுரர்கள் எனப்பட்டனர்.

இவர்களில் ஒருவனான நமுச்சி மாயசக்தியைப் பயன்படுத்திப் பூமியில் வாழும் உயிர்களை எல்லாம் அச்சுறுத்தினான். தவம் புரியும் முனிவர்களைக் காடுகளில் இருந்து வெளியேற்றினான். அவர்கள் தவம் செய்ய முடியாமல் தவித்தனர். இந்நிலையில் நமுச்சிக்குத் திடீரென விபரீத எண்ணம் தோன்றியது. மாயசக்தியைப் பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கதிர்களை மறையச் செய்தான். உலகம் இருளில் மூழ்கவே உயிர்கள் பாதிப்படைந்தன. பின்னர் அசுரன் தேவலோகத்தையும் இருளில் மூழ்கடித்தான்.

தேவர்களும் செயல்பட முடியவில்லை. வருத்தமடைந்த தேவர்கள், தங்களின் தலைவனான இந்திரனைச் சரணடைந்தனர். அவனும் உதவி புரிவதாக தெரிவித்தான். தேவலோக படை வீரர்களுடன் நடந்ததை அறிய சூரியனை நோக்கிச் சென்றான். இதை அறிந்த அசுரன் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக பலன், பாகன் என்னும் இரு அசுரர்களை நமுச்சி அனுப்பி வைத்தான்.

இந்திரனையும், அவனது படை வீரர்களையும் வழிமறித்து தாக்கினர். வழியெங்கும் இருளாக இருந்ததால் இந்திரனும், படை வீரர்களும் அசுரர்கள் எங்கிருந்து வந்து தாக்குகிறார்கள் என்பது புரியாமல் தவித்தனர்.

பலன் என்னும் அசுரன் வில்லில் ஆயிரம் அம்புகளைப் பொருத்தி இந்திரனின் குதிரைகளைத் தாக்கினான். இந்திரனின் குதிரைகள் காயமடைந்ததால் நகர

முடியாமல் திணறின.

பாகன் என்னும் அசுரன் தன் வில்லில் இருநுாறு அம்புகளைப் பொருத்தி இந்திரனின் தேரை முடக்கினான். அதைச் செலுத்திய தேரோட்டி மாதலி காயமடைந்தான்.

அசுரர்கள் தாக்குதலை பொறுக்க முடியாமல் இந்திரன் வஜ்ராயுதத்தை வீசினான். அது பாகனின் தலையைத் துண்டித்து விட்டு இருப்பிடம் வந்தது. தன்னுடன் வந்த பாகனின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்ட பலன் கோபமடைந்தான்.

ஆயுதங்கள் அனைத்தையும் இந்திரனை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தால் அவற்றை தடுத்தான் இந்திரன்.

பலன் ஏவிய ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில், இந்திரன் வஜ்ராயுதத்தை ஏவினான். அது அசுரனின் தலையை துண்டித்தது. தான் அனுப்பிய அசுரர்கள் இருவரும் கொல்லப்பட்டதை அறிந்த அசுரன் நமுச்சி ஆவேசத்துடன் வந்தான். இந்திரன் வஜ்ராயுதத்தால் நமுச்சியை தாக்கிய போதும் அசுரனின் உடம்பில் சிறுகாயம் கூட ஏற்படவில்லை.

ஆனால் நமுச்சி ஏவிய ஆயுதத்தால் இந்திரன் காயம் அடைந்தான். உயிருக்கு பயந்து ஓடத் தொடங்கினான். ''இந்திரா... நீ அழிக்க நினைக்கும் அசுரனின் பெயர் நமுச்சி. உலர்ந்த அல்லது ஈரமான எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என வரம் பெற்றவன் இவன். எனவே ஆயுதத்தால் அன்றி மாற்றுவழியில் அவனை அழிக்க முயற்சி செய்” என்று அசரீரி கேட்டது.

அதனைக் கேட்ட இந்திரன் உலர்ந்த அல்லது ஈரமில்லாத பொருள் எது?

என்பதை சிந்தித்தபடியே பூமிக்கு வந்தான். பூமியும் இருளடைந்து கிடந்தது.

அங்கிருந்த கடற்கரைப் பாறையொன்றில் வந்தமர்ந்த அவன், பாறை மீது கடல் அலை மோதுவதைக் பார்த்தபடி நின்றான். கடல் அலை பாறையில் மோதியதால் ஏற்பட்ட நுரையைக் கால்களால் தள்ளினான்.

அந்த நுரை அவனது கால்களை நனைக்கவுமில்லை. அப்போது அவனது மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு விடை கிடைத்தது. அசுரன் நமுச்சியைக் கொல்வதற்கான புதிய வழிமுறை தெரிந்தது. பாறையிலிருந்து இறங்கி அங்கு சேர்ந்த கடல் நீரிலிருந்து உருவான நுரைகளை சேகரித்தான். அதை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்தான்.

இந்திரன் பூமியில் இருந்து சூரியனை நோக்கிச் சென்றான். “நமுச்சி நீ எங்கிருக்கிறாய்? துணிவிருந்தால் வெளியில் வா” எனக் கத்தினான் அசுரன். அதனைக் கேட்ட நமுச்சி, “தான் பெற்ற வரம் பற்றி தெரியாமல் இந்திரன் தன்னை அழிக்கிறேன் என்று மீண்டும் வந்திருக்கிறானே?” என எண்ணி சிரித்தான் நமுச்சி. ''இந்திரா... இன்றோடு நீ தொலைந்தாய்” என்றபடி ஆயுதத்தை வீசினான். தாக்குதலில் இருந்து சற்று விலகி நின்ற இந்திரன், தான் சேகரித்த கடல் நுரையினை நமுச்சியை மீது வீசினான். அந்த நுரை நமுச்சியின் கழுத்தை வளையம் போல் சுற்றிக் கொண்டு அறுக்கத் தொடங்கியது.

நுரையை அகற்ற எடுத்துக் கொண்ட அசுரனின் முயற்சி பலனளிக்கவில்லை. நுரை அவன் கழுத்தை அறுத்துத் துண்டாக்கியது. தலையற்ற உடல் சரிந்தது. துண்டிக்கப்பட்ட தலை, “என்னையும், என் நண்பர்களையும் கொன்ற பாவம் உன்னைச் சும்மா விடாது. எங்களைக் கொன்ற பாவம் உன்னை அழிக்கும்” என சபித்து விட்டு பூமியில் ஓடும் நதி ஒன்றில் விழுந்தது. நமுச்சி இறந்ததும் அவனது மாயசக்திகளும் மறைந்தன. மீண்டும் சூரியக்கதிர்கள் பிரகாசிக்கத் தொடங்கியது. மூவுலகங்களும் வழக்கம் போல செயல்படத் தொடங்கின.

அசுரன் நமுச்சி, அவனது நண்பர்கள் பலன், பாகன் ஆகிய மூவரையும் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் இருந்து விடுவிக்கும்படி பிரம்மாவை வேண்டினான். “பூலோகத்தில் அருணா, சரஸ்வதி என்னும் புனித நதிகள் சேருமிடத்தில் நீராடி, அங்கிருக்கும் சிவபெருமானை வழிபடு” என பிரம்மா வழிகாட்டினார். இந்திரனும் குறிப்பிட்ட இடத்தில் நீராடி தோஷத்தில் இருந்து விடுபட்டான்.



--தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us