sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 1

/

பச்சைப்புடவைக்காரி - 1

பச்சைப்புடவைக்காரி - 1

பச்சைப்புடவைக்காரி - 1


ADDED : பிப் 02, 2024 01:50 PM

Google News

ADDED : பிப் 02, 2024 01:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாயின் அவதாரம்

சென்னையில் இருந்த அரசு அலுவலகத்திற்கு நண்பருடன் சென்றேன். நாங்கள் சந்திக்கவேண்டிய அலுவலருக்காகக் காத்திருந்தபோது அந்த முதியவரைப் பார்த்தேன். கிழிந்த ஆடை. கண்களில் சோகம்.

முதியவர் ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். அலுவலரோ துாக்கியெறிந்து பேசினார்.“ஆமாய்யா, உன் பையன் வேலையில இருந்த போது கரண்ட் அடிச்சி செத்துட்டான். அரசு உதவித் தொகை அஞ்சு லட்ச ரூபா கெடைக்கணும். நீயும் ஒரு வருஷமா அலைஞ்சிக்கிட்டிருக்க. அது கெடைக்காது. பஸ் பிடிச்சி ஐகோர்ட்டுக்கு போ. என் மகன் செத்ததுக்கு நஷ்ட ஈடு தரமாட்டேங்கறாங்கன்னு ஜட்ஜ்கிட்டப் புகார் கொடு. அவங்க உனக்கு காச தந்திருவாங்க. காலங்காத்தால வந்துட்டாங்க…''

முதியவர் சோர்வுடன் திரும்பினார். என் கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து விட்டு அவருக்காக பிரார்த்தித்தேன்.

வேலை முடிந்ததும் நாங்கள் வெளியே வந்தோம். நண்பர் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார். முதியவரிடம் செலவுக்கு பணம் தரலாம் என நினைத்தேன். அவர் அங்கே இல்லை.

அங்கிருந்த ஆலமரத்தடியில் அச்சடித்த படிவம், பத்திரத் தாள்களை விற்றுக் கொண்டிருந்தனர். பளிச்சென்று இருந்த ஒரு முப்பது வயதுப் பெண்ணைக் கண்கொட்டாமல் பார்த்தேன். அப்படி ஒரு அழகியை நான் பார்த்ததில்லை. விடுவிடுவென என்னை நோக்கி வந்தாள். நான் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

“ஏன்யா வெறிச்சு பார்த்த?”

பேந்தப் பேந்த விழித்தபடி கைகூப்பினேன். என்னை அறியாமல் கண்கள் கண்ணீரைப் பெருக்கின. பச்சைப்புடவைக்காரி சன்னதியில் நிற்கிறேன் எனப் புரிந்தது. ஆடை அழுக்கானாலும் பரவாயில்லை என விழுந்து வணங்கினேன்.

“எத்தனை மாதங்கள்… தாயே? உங்களைப் பார்க்காமல் கண்கள் பூத்துவிட்டன''

“சக மனிதருக்காக வருந்தும்போது உன்முன் தோன்றுவேன்.”

“இப்போது...''

“அந்த முதியவருக்காக பிரார்த்தித்தாயே! அதனால்தான் வந்தேன்”

“அவருடைய துன்பம்...''

“நாளையே தீரப்போகிறது. அந்த முட்டாள் முதியவரை நீதிமன்றத்திற்குப் போ என கிண்டலாகத்தான் சொன்னான். அவர் அதை உண்மையென நினைத்து அங்கே போவார்”

“வழக்கு தொடுக்காமல், வழக்கறிஞர் துணையில்லாமல், காசு செலவழிக்காமல், தக்க ஆவணங்கள் இல்லாமல்...''

“இந்த பிரபஞ்சத்தின் நீதிமன்றத்தை நடத்துபவள் நான். என் நீதிமன்றத்தில் ஆவணம், வாதம், வழக்கறிஞர்கள் தேவையில்லை. அந்த காட்சியைப் பார்”

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு அறை. வழக்கறிஞர்களும் ஊழியர்களும் வழக்காடுபவர்களும் குழுமியிருந்தனர். நீதிபதியின் இருக்கையில் ஐம்பது வயது பெண் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

முதல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சற்றுத் தள்ளி ஒரு முதியவர் நின்றிருப்பதை நீதிபதி கவனித்துவிட்டார். கிழிந்த ஆடையுடன் தனி மனிதனாக நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியைப் புறம் தள்ளிவிட்டு முன்னால் நடந்த வழக்கில் கவனம் செலுத்தினார்.

ஒரு மணி நேரத்தில் வழக்கறிஞர்கள் வாதங்களை முடித்துக் கொண்டனர். அப்போதும் முதியவர் கண்கள் அலைபாய அதே இடத்தில் நிற்பதைப் பார்த்தார் நீதிபதி.

அடுத்த வழக்கிற்கான அறிவிப்பைப் படிக்க எழுந்த ஊழியரைக் கையமர்த்தினார். இன்னொரு ஊழியர் மூலம் முதியவரை வரவழைத்து, “ஐயா, ஒரு மணி நேரமா கவனிச்சிக்கிட்டிருக்கேன். யாருக்காகவோ காத்திருக்கற மாதிரி தெரியுது. உங்க கேஸ் இந்தக் கோர்ட்டுலதான் நடக்குதா?”

முதியவர் உடைந்து போய் அழுதார். அரசு வேலை பார்த்த மகனின் அகால மரணம் பற்றியும் அதனால் தானும், மனைவியும் வாழ்வாதாரம் இன்றி தவிப்பது பற்றியும் சொன்னார். “கவர்மெண்ட் உதவித் தொகை கெடைக்கலியா?”

“அதுக்காகத்தான் ஒரு வருஷமா அலைஞ்சிக்கிட்டிருக்கேம்மா.”

“உங்க மகனப் பத்திய விபரங்கள அங்க இருக்கறவர்கிட்ட சொல்லுங்க. காலையிலருந்து ஏதாவது சாப்பிட்டீங்களா?”

“அதுக்கு வழியில்ல, தாயி!”

நீதிபதி உதவியாளரை அழைத்தார். தன் கையில் இருந்து இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து,“ஓட்டலுக்குக் கூட்டிப் போய் சாப்பிட வைங்க. வேட்டி, சட்டை வாங்கிக் கொடுத்து ரெண்டு மணிக்குள்ள கூட்டிக்கிட்டு வாங்க.”

அடுத்த வழக்கை அறிவிக்கலாமா என ஊழியர் கேட்டார்.

“பத்து நிமிஷம் கழிச்சி அடுத்த வழக்கப் பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அறைக்குச் சென்றார் நீதிபதி. நீதிமன்றமே எழுந்து மரியாதை செய்தது.

முதியவர் சொன்ன விபரங்களைப் பார்த்து அவர் மகன் எந்த துறையில் பணிபுரிந்தான் என அறிந்து அத்துறையின் வழக்கறிஞரை அலைபேசியில் அழைத்தார் நீதிபதி.

“ஒரு ஆளு பிள்ளையத் தொலச்சிட்டு ஒரு வருஷமா அலையிறாரு. என்ன நடக்குது?”

வழக்கறிஞர் நடுங்கினார்.

“இன்று மதியம் ரெண்டு மணிக்கு அந்த டிப்பார்ட்மெண்ட் செகரட்டரியுடன் என் முன்னால ஆஜராகணும். இல்லேன்னா நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையச் சந்திக்க நேரும்னு அரசாங்கத்துல சொல்லிருங்க”

மதியம் இரண்டு மணி. நீதிபதியின் அறை. அவருக்காகக் கொண்டு வரப்பட்ட சாப்பாடு திறக்கப்படாமல் இருந்தது. முதியவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மறுபக்கத்தில் அந்தத் துறையின் செயலரான ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அந்தத் துறை வழக்கறிஞரும் அமர்ந்திருந்தனர்.

வழக்கறிஞர் பேச ஆரம்பித்தார்.

“விளக்கம் எல்லாம் வேண்டாம். இவர் மகன் அரசுத்துறை வேலையில இருந்தாருங்கறது உண்மைதானே?”

“யெஸ், யுவர் ஹானர்.”

“இன்னிக்கு வெள்ளி. திங்களன்று மத்தியத்துக்குள்ள இவரோட கணக்குல அஞ்சு லட்ச ரூபாய் வரவாயிரணும்”

“அது வந்து...''

“வந்தாவது போயாவது.. என்னப் பத்தி தெரியும்ல? திங்களன்று பணம் வரலேன்னா என் அதிகாரத்தப் பயன்படுத்தி இவரு கேச எடுத்து கவர்மெண்ட்டுக்கு நோட்டீஸ் அனுப்புவேன். உதவித் தொகை போக, தாமதப்படுத்தினதுக்கு வட்டி, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடுன்னு போட்ருவேன். அந்த டிபார்ட்மெண்ட் செக்ரட்டரியா இருக்கற நீங்க நீதிமன்ற அவமதிப்பு, ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்கணும். நீங்க போகலாம்.”

அவர்கள் சென்றவுடன் முதியவரைப் பார்த்து கனிவுடன் பேசினார் நீதிபதி.

“ஐயா, திங்களன்று பணம் வரலேன்னா என் பி.ஏ.,க்கு போன் பண்ணுங்க. நீங்க இங்க வரவேண்டாம். பணத்துக்கு நான் பொறுப்பு”

முதியவர் தள்ளாடியபடி எழுந்து, “நான் மதுரைக்காரன், எங்காத்தா பச்சைப்புடவைக்காரியப் பாத்து நாளாச்சேன்னு கவலைப்பட்டேன். எங்காத்தா மீனாட்சிய ஜட்ஜ் அம்மாவாப் பாத்துட்டேன்”

காட்சி முடிந்ததும் கண்ணீர்த் திரையினுாடே பச்சைப்புடவைக்காரியைப் பார்த்தேன்.

“அன்று மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து அசுரனை அழித்தீர்கள். இன்று நீதிபதியாக அவதரித்து அநீதியை சம்ஹாரம் செய்தீர்கள். கூடவே இன்னொரு சம்ஹாரமும் செய்யவேண்டும் தாயே!”

“இறைவிக்கே கட்டளை போடுகிறாயோ?”

“பிரார்த்திக்கிறேன். பிச்சை எடுக்கிறேன். என் மனதில் அவ்வப்போது தோன்றும் அன்பின்மையை அடையாளம் தெரியாமல் சம்ஹாரம் செய்யவேண்டும்” பெரிதாகச் சிரித்தபடி மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

80568 24024






      Dinamalar
      Follow us