
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதிக்கு சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார் ராமானுஜர். இரவானதால் ஓரிடத்தில் தங்கினர். விடிந்தபோது தங்களைச் சுற்றி எங்கும் வயல் இருப்பதை பார்த்தனர். எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் திகைத்தபோது, அங்கே விவசாயி ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவரிடம், ''திருப்பதி செல்லும் வழி உங்களுக்கு தெரியுமா'' எனக்கேட்டார் ராமானுஜர்.
''ஐயா. நான் சென்றதில்லை. அங்கே தெரியும் மலையை ஒட்டிய பாதையில் 'வெங்கடரமணா கோவிந்தா' என பக்தர்கள் பாடிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்'' என்றார்.
''திருப்பதிக்கு வழி காட்டியதால் இவர் நமக்கு குருநாதராக மாறிவிட்டார். அதனால் இவருக்கு தண்டனிடுவோம்'' என சொல்லி வணங்கினார்.
உங்களிடம் வழி கேட்டால் உதவுங்கள். இதுவும் நமக்கு புண்ணியமே.