ADDED : மே 24, 2024 07:57 AM

உடம்பும் உயிரும்
கந்தன் தாத்தாவிடம், 'இறந்து போயிட்டார்' என்பதற்கான விளக்கத்தை சொல்லுங்கள்' என கேட்டான். பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் 22ம் ஸ்லோகத்தில் கிருஷ்ணர் இதற்கான விளக்கத்தை சொல்லி இருக்கிறார் என்றார் தாத்தா.
வாஸாம் ஸிஜீர்ணானியதா ² விஹாய
நவானிக்³ ரு ஹ்ணாதிநரோ(அ)பராணி।
ததா ² ஶரீராணிவிஹாயஜீர்ணா-
ந்யன்யானிஸம் யாதிநவானிதே ³ஹீ॥
எவ்வாறு பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை மனிதன் அணிந்து கொள்கிறானோ, அது போல ஆத்மாவானது பழைய உடலை விட்டு விட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது” என்கிறார் கிருஷ்ணர்.
'சரி தாத்தா... திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்' எனக் கேட்டான் கந்தன். இதற்காக விளக்கம் 338ம் திருக்குறளில் உள்ளது.
குடம்பை தனித்து ஒழியப்புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
உடம்போடு உயிருக்குள்ள நட்பானது, ஒரு பறவை தன் கூட்டை விட்டு பறந்தது போலாகும் என்கிறது.
பகவத்கீதையில ஆத்மான்னு கிருஷ்ணர் சொல்கிறார். இந்த கருத்தை தான் திருவள்ளுவரும் சொல்கிறார் என்றார் தாத்தா.
இந்த உடலில் ஆத்மா என்ற ஒன்று இருந்தால் தான், அது வேலை செய்யும். இல்லையென்றால் உடம்பு மரம் போலாகி விடும். அதனால் தான் ஆத்மா இந்த உடம்பை விட்டுச் செல்லும் போது, உடல் கட்டை போல தரையில் விழுந்து விடுகிறது. உடனே கந்தனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
'எங்க தாத்தா இப்போது எங்கிருக்கிறார்? அவருடைய உயிர் எங்கே போனது? தாத்தாவை நான் திரும்ப பார்க்க முடியுமா?'' எனக் கேட்டான் கந்தன்.
இதுதான் பரம ரகசியம். பிறப்பு எப்படி வந்தது என யாருக்கும் தெரியாது. அதுமாதிரி நாம் இறந்த பிறகு என்ன ஆகப் போகிறோம் என்பதும் தெரியாது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் நாம் பூமியில் இருக்கிறோம் என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554