
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரமண மகரிஷியின் குடிலுக்கு பக்தர் ஒருவர் வந்தார்.
தாம்பாளம் ஒன்றில் அல்வாவை வைத்து விட்டு வணங்கினார். நெய்யும், முந்திரியும் கலந்த அல்வாவின் வாசனை மூக்கை துளைத்தது. ரமணரிடம் பிரசாதம் வாங்க காத்திருந்த போது நாய் ஒன்று வந்தது. விரட்ட முயன்ற பக்தரிடம், ''பாவம்... விரட்டாதே. அதுவும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே'' என்றார் ரமணர்.
இதையே தனக்கு கிடைத்த உபதேசமாக கருதிய பக்தர் விலகி நின்றார். சிறிது அல்வாவை நாய்க்கு ரமணர் கொடுக்க நாய் அதை கவ்வியபடி ஓடியது. மீதி அல்வாவை நாய்க்கு கொடுத்ததால் 'இது பைரவர் பிரசாதம்' என சொல்லி அனைவருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார்.