தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தன்னைத் தானே...

தன்னைத் தானே...

தன்னைத் தானே...


ADDED : ஜூன் 07, 2024 10:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 10:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதன், மகான் என்ற பேதம் நோய்க்கு கிடையாது. காஞ்சி மஹாபெரியவரும் காய்ச்சல், ஜலதோஷத்தால் அவதிப்பட்டதுண்டு. ஒருமுறை மஹாபெரியவருக்கு உடல்நிலை சரியில்லாத போது பரிசோதித்த டாக்டர் வெங்குடி வி. ராமமூர்த்தி.

தன் உடல் நிலையை சோதிக்க நினைத்தால், 'வெங்குடியை வரச் சொல்லு' என்பார் மஹாபெரியவர்.

டாக்டர் நம் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.

மஹாபெரியவரைச் சோதிக்கும் டாக்டர் எப்படி நாடி பார்ப்பார்?

பூஜை, தவம் என இருக்கும் அவரது கையை தொட்டால் ஆச்சாரம் போகுமே என பயந்த டாக்டர், வெண்பட்டுத் துண்டால் சுவாமிகளின் கையில் சுற்றி, அதன் மீது கை வைத்து நாடி பார்ப்பார். சுவாமிகளின் கையைத் தொடும் பாக்கியம் பெற்றவர் இந்த டாக்டர். அப்போது சுவாமிகளின் மூச்சுக்காற்று இவர் மீது படும் என்பது சிலிர்க்க வைக்கும் விஷயம்.

ஒருமுறை மஹாபெரியவருக்கு காய்ச்சல் வந்தது. உடனடியாக டாக்டரை வரவழைத்தனர். வெண்பட்டுத் துண்டால் பெரியவரின் கையில் சுற்றி விட்டு நாடி பார்த்தார்.

நாடித்துடிப்பு அதிகமாக இருந்தது. காய்ச்சல் கடுமையாக இருப்பதை உணர்ந்தார்.

மஹாபெரியவருக்கு இது தெரியாமலா இருக்கும்?

டாக்டரிடம், 'ஒரு மணி நேரம் இங்கேயே இரு... மறுபடியும் ஒரு தடவை நாடி பாத்துட்டு அப்புறம் போகலாம்' என்றார்.

பெரியவர் சொல்லுக்கு மறு பேச்சு ஏது!

ஒருமணி நேரம் கடந்ததும் கையில் துணியைச் சுற்றி மீண்டும் நாடி பார்த்தார்.

பிரமித்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. காய்ச்சலும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

'இது எப்படி சாத்தியம்... இதுபோல நான் பார்த்ததில்லையே...' என மனதிற்குள் நினைத்தபடி நமஸ்காரம் செய்து விட்டு பிரசாதம் பெற்றார்.

அவர் அங்கிருந்து நடந்த போது அடுத்த வேளை சந்திரமவுலீஸ்வரர் பூஜைக்கு ஸ்நானம் செய்ய எழுந்தார் மஹாபெரியவர்.

அன்று மாலையில் மீண்டும் மடத்திற்கு வந்தார் டாக்டர்.

முகப்பொலிவுடன் இருந்த மஹாபெரியவர், 'இந்த உடம்பு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும். எதிர்பாராமல் உடம்புக்கு வரும் சிரமங்கள் எல்லாம் சிலகாலமே... உயிர் வாழத் தேவையான அளவு உடம்பைக் கவனித்துக் கொண்டால் போதும்' என்றார்.

எப்பேர்ப்பட்ட உபதேசத்தை நமக்கு சொல்கிறார் மஹாபெரியவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்

போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us