sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஜாக்கிரதை வம்சமே அழிந்து போகும்!

/

ஜாக்கிரதை வம்சமே அழிந்து போகும்!

ஜாக்கிரதை வம்சமே அழிந்து போகும்!

ஜாக்கிரதை வம்சமே அழிந்து போகும்!


ADDED : ஆக 10, 2014 06:04 PM

Google News

ADDED : ஆக 10, 2014 06:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதங்கன் என்ற மாணவன் குருகுலத்தில் படித்தான். படிப்பு முடிந்தது. தனக்கு தட்சணையாக நாகரத்தினம் பதித்த கம்மல் வேண்டும் என்றும், அதை தன் மனைவிக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் குரு சொன்னார். அது எங்கிருக்கிறது என்பதை குருவின் மனைவி மூலம் அறிந்த உதங்கன், மிகுந்த சிரமத்தின் பேரில் அதைக் கண்டுபிடித்து எடுத்து வந்தான். வரும்வழியில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, தன் கையில் இருந்த கம்மலை ஓரிடத்தில் வைத்து விட்டு ஒதுங்கினான். திரும்பி வந்து பார்த்த போது, அதைக் காணவில்லை. நாகங்களின் அரசனான தட்சகன் அதைத் திருடிச் சென்று விட்டான்.

அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்ற உதங்கன், நாகலோகத்தை அடைந்தான். அங்கிருந்த தட்சகன், தான் எந்த ஆபரணத்தையும் எடுத்து வரவில்லை என பொய் சொன்னான். உடனே இந்திரனை நோக்கி நீதிகேட்டு தவமிருந்தான் உதங்கன். இந்திரன் அவனுக்கு ஏற்பட்ட அநீதியை உணர்ந்து, பெரும் விஷப்புகையை நாகலோகம் நோக்கி செலுத்தினான். தட்சகன் மட்டுமின்றி எல்லா பாம்புகளும் மடிந்தன.

உதங்கன் அங்கிருந்த கம்மலுடன் குரு வீடு வந்து, அதை ஒப்படைத்தான்.

பாடுபட்டு சேர்த்த பணத்தை ஊழல் செய்தும், திருடியும் சிலர் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்கின்றனர். அவர்களது வம்சமே அழிந்து போகும் என்பதற்கு இந்தக்கதை உதாரணம்.






      Dinamalar
      Follow us