sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆபத்தான ஆசை!

/

ஆபத்தான ஆசை!

ஆபத்தான ஆசை!

ஆபத்தான ஆசை!


ADDED : ஆக 21, 2013 12:21 PM

Google News

ADDED : ஆக 21, 2013 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காம்ய நாட்டில் வசித்த தேவசேனை என்னும் பருவமங்கையை பலரும் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். அழகில் அவளை மிஞ்ச யாருமில்லை. அவள் ஒரு வணிகரின் மகள். நூறு கோடி பொற்காசுகளுக்கு அதிபதி. அழகும், பணமும் உள்ள தேவசேனையின் வீட்டை மாப்பிள்ளை கூட்டம் மொய்த்தது. அவர், அந்நாட்டு சேனாதிபதிக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஒருமுறை, அவ்வூர் கோயில் திருவிழா வந்தது. அரசன் அந்த விழாவுக்கு வருவது வழக்கம். அப்போது, பெண்கள் தங்கள் வீட்டு உப்பரிகையில் நின்று அரசனுக்கு மலர்மாரி பொழிந்து வரவேற்பர். சேனாதிபதியின் மனைவி என்ற முறையில், தேவசேனையும் மலர் மழை பொழிந்தாள். தற்செயலாக அவளைப் பார்த்து விட்ட மன்னன், ''இது யார் வீடு? இப்படியொரு அழகான பெண் நம் ஊரில் இருக்கிறாளா?'' என்று அவளைப் பற்றி விசாரித்தான்.

அவள் சேனாதிபதியின் மனைவி என்று தெரிந்த பிறகும், அவள் மீது ஆசை கொண்டான். இந்த விஷயம் சேனாதிபதிக்கு தெரிந்து விட்டது. தன் மனைவியை மன்னனிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு உபாயம் செய்தான்.

அவ்வூரில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அந்த மரத்திலுள்ள புதரில் ஒரு ஆண் தேவதை இருப்பதாக மக்கள் நம்பினர்.

அந்த தெய்வத்தின் மூலம் தன் மனைவியைக் காத்து விடலாம் என சேனாதிபதி முடிவெடுத்தான்.

தன் நண்பன் ஒருவனை அழைத்து, விஷயத்தை விளக்கமாகச் சொல்லி,''நீ அந்த மரத்தின் புற்றுக்குள் போய் மறைந்திரு. நான் அரசனுடன் வந்து சில கேள்விகளைக் கேட்பேன். இப்போது சொல்லிக் கொடுக்கிற பதில்களைச் சொல்லு,'' என்றான். அந்த உயிர் நண்பனும் சம்மதிக்கவே, அரசனை தற்செயலாக வெளியே அழைத்துச் செல்வது போல, அந்த மரத்தின் பக்கமாக கூட்டிச்சென்றான் சேனாதிபதி.

அந்த தெய்வத்தின் மீது அரசனுக்கு அதீத பக்தியுண்டு. மரம் அருகே சென்ற போது, ''அரசனே, நில்! உன் வேலைக்காரனின் மனைவி மீது ஆசைப்படுபவன் நீதானே,'' என்றது குரல்.

அரசன் அதிர்ந்து விட்டான்.

''தெய்வமே! ஆம்...தயவுசெய்து இதற்கு மேல் அதுபற்றி பேசாதே. எதுவும் சொல்வதாக இருந்தால் என் கனவில் தனியே வந்து சொல். மற்றவர் முன்னால் அவமானப்படுத்தி விடாதே!'' என்று பதைபதைப்புடன் சொன்னான்.

''நாட்டின் ராஜா குடிமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அதிகாரமும், செல்வமும் கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக, ஊரி<<லுள்ள பொருளையெல்லாம் உன்னுடைய உடமை என நினைக்கக் கூடாது. காட்டிலிருக்கும் சிங்கராஜாவுக்கு அங்குள்ள மிருகங்கள் உடமை. அது மிருகம். நீ மனிதனல்லவா! உனக்கு பகுத்தறியும் திறன் உள்ளதே! நீ நினைத்தால் ஆயிரம் கன்னியரைக் கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், பிறன் மனைவியை, அதிலும் உன்னை நம்பி வேலை செய்பவனின் மனைவி மீது ஆசைப்படுவது அநியாயம் அல்லவா? நீதி தவறிய நீ உயிரோடு இருக்கலாமா,'' என்றான் மரத்துக்குள் தேவதையின் வடிவில் இருந்தவன்.

'இந்த விஷயம் சேனாதிபதி மூலம் ஊருக்குள் தெரிந்து விடும்! மக்கள் தன்னை கேவலமாகப் பேசுவார்களே!' என நினைத்த அரசன், அங்கிருந்து வேகமாக கடலை நோக்கி தேரைச் செலுத்தினான். தேவதையின் உத்தரவைமதித்து கடலில் விழுந்து மாண்டு போனான்.

மன்னனுக்கு வாரிசு இல்லாததால், சேனாதிபதியிடமே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர் மக்கள்.






      Dinamalar
      Follow us