sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உச்சத்தில் இருந்தாலும்...

/

உச்சத்தில் இருந்தாலும்...

உச்சத்தில் இருந்தாலும்...

உச்சத்தில் இருந்தாலும்...


ADDED : மார் 22, 2019 02:32 PM

Google News

ADDED : மார் 22, 2019 02:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகுலத்தில் ஆருணி என்ற இளவரசன் படித்தான். மிகவும் அடக்கமானவன். குருவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுபவன். ஒருமுறை குருவின் வயலுக்குள், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்தது. பயிர்கள் மூழ்க ஆரம்பித்தன. ஆருணியிடம், “நீ போய் உடைப்பை அடைத்து வா” என குரு கட்டளையிட்டார்.

அரண்மனையில் செல்லமாக வளர்ந்த ஆருணி மண்வெட்டியுடன் போனான். உடைப்பை அடைக்க போராடினான். முடியாததால் உடைப்புக்கு குறுக்கே படுத்து விட்டான். அவனைத் தாண்டி தண்ணீர் ஒரு சொட்டு கூட வயலுக்குள் போகவில்லை.

இரவு வரை ஆருணி வராததைக் கண்ட குரு, மற்ற மாணவர்களுடன் வயலுக்கு சென்றார். ஆருணி உடைப்பை மறைத்து படுத்திருப்பதையும், தண்ணீர் வயலுக்குள் வராததையும் கண்டு ஆச்சரியப்பட்டார். குரு பக்தியே இதற்கு காரணம் என்பதைப் புரிந்து கொண்டார். அவனை எழுந்து வர ஆணையிட்டார். ஆருணிக்கு 'உத்தாலகன்' என்று பட்டம் கொடுத்தார். இதற்கு 'தண்ணீரைத் தடுத்தவன்' என பொருள்.

உயரத்தில் இருந்தாலும், அடக்கமுடன் வாழ்பவன் உயர்வு பெறுவான் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.






      Dinamalar
      Follow us