sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!

/

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!


ADDED : பிப் 27, 2018 09:42 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியை ஆட்சி செய்த மன்னன் கன்மாடபாதன், தர்ம குணம் கொண்டவனாக விளங்கினான். இவனது குருவான வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திர ரிஷிக்கும் பகை இருந்தது. ஒருமுறை கன்மாடபாதனை சந்தித்த விஸ்வாமித்திரர் தர்மசத்திரம் அமைக்க வேண்டினார். மன்னனும் அவ்வாறே செய்தான்.

ஒருமுறை அங்கு வசிஷ்டர் தர்மம் கேட்டு வந்த நேரத்தில், எதிரியான விஸ்வாமித்திரர், அங்கிருந்த உணவுப்பொருட்களை பசுவின் கன்றுகளாக மாற செய்தார். இதையறிந்த தர்மசத்திர அதிகாரி அதிர்ந்தார். இதை சொன்னால் வசிஷ்டர் நம்புவாரோ மாட்டோரோ என்றெண்ணியபடி, ஒரு கன்றை சமைத்து, உணவாக அளித்தார். சாப்பாட்டின் முன் அமர்ந்ததுமே, துர்நாற்றம் வீச, கோபமடைந்த வசிஷ்டர் மன்னனிடம் சென்றார். கன்றை சமைத்து உணவிட்டதற்காக அவனை, நரமாமிசம் தின்னும் ராட்சஷன் ஆகும்படி சபித்தார்.

ஊழியர் செய்த தவறுக்கு பொறுப்பேற்ற மன்னன், சாப விமோசனம் கேட்டான். வசிஷ்டர் பதில் பேசாமல் போய் விட்டார். மன்னனின் உருவம் விகாரமானது. அவன் காட்டுக்கு போய், விமோசனம் பெற எமதர்மராஜாவை நோக்கி தவமிருந்தான். எமன் வந்தார். ''என்னை நினைத்து தவமிருந்தால் சாப விமோசனம் கிடைக்காது,'' என்றார் எமன். இதைக் கேட்ட ராட்சஷ மன்னனுக்கு கோபம் வந்தது.

எமனுடன் யுத்தம் செய்ய துணிந்தான்.

தன் கையில் இருந்த சூலம் ஒன்றை மன்னன் மீது எமன் எய்தான். ''எமனே! தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மையானால் இந்த சூலம், நொறுங்கட்டும்'' என்றான் மன்னன். சொன்னது போலவே நடந்தது.

''கன்மாடபாதனே! சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விஸ்வாமித்திரர் மட்டுமே,''என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான் எமன்.

விஸ்வாமித்திரரை சந்தித்தான் கன்மாடபாதன். அவர், ''நீ வசிஷ்டரின் நுாறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்பிடும் சாபத்தை அவர் தானே தந்தார்! அவரே அதற்குரிய வினையை அனுபவிக்கட்டும்,'' என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் ஓடினான். அவர் அவனிடம், ''ஒரு காலத்தில் வசிஷ்டர் என் பிள்ளைகளை சாம்பலாகும்படி சபித்தார். அதன் பலனாக, அவரது பிள்ளைகளும் மாண்டு போனார்கள். என் பழி உன் மூலம் தீர்ந்தது. உனக்கு விமோசனம் பெற்று தருகிறேன்,” எனக் கூறி சிவனை வரவழைத்தார். சிவதரிசனம் கண்ட மன்னன், ஆனந்தம் கொண்டான். அவன் சாபம் நீங்கப்பெற்று, சுயரூபம் பெற்றான். மீண்டும் நீண்டகாலம் ஆட்சி புரிந்தான்.






      Dinamalar
      Follow us