sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (12)

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (12)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (12)

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (12)


ADDED : ஜூலை 10, 2013 12:10 PM

Google News

ADDED : ஜூலை 10, 2013 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஸ்வாமித்திரர் ஏதோ உணர்ச்சி வேகத்தில் தவத்தில் இறங்கிவிட்டதாகத் தான் வசிஷ்டரும் எண்ணினார். ஆனால், விஸ்வாமித்திரர் சாதித்துக் காட்டிவிட்டார். நெடிய அவரது தவமும், திரிசங்கு சொர்க்கத்தை அவர் நிறுவியதும் அவரை பிரம்மரிஷியாக ஆக்கி விட்டது.

அதேசமயம் வசிஷ்டர் மேல் உள்ள கோபம் மட்டும் தீரவே இல்லை...!

கந்தர்வன் அர்ஜுனனுக்கு வசிஷ்ட புராணம் சொன்னதில் விஸ்வாமித்திரர் எப்படி பிரம்ம ரிஷியானார் என்பது புரிந்தது.

''இந்த கோபம் எதாவது மோசமான விளைவுகளை வசிஷ்டர் பிரானுக்கு செய்வித்ததா?'' என்றும் கேட்டான் அர்ஜுனன்.

''ஆம்! பெரும் மோசத்தை விஸ்வாமித்திரர் வசிஷ்டருக்கு செய்து விட்டார்... வசிஷ்டருக்கு நூறு புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் மூத்தவன் சக்தி.

அப்பாவைப் போலவே சக்திகளை பெருக்கிக் கொள்ள தொடங்கினான். இவன் கானகத்தில் நீராடச் சென்றபோது இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த கல்மாஷபாதன் என்கிற அரசன் எதிரில் வந்தான். அது ஒற்றையடிப் பாதை. கல்மாஷபாதன் சக்தியை விலகச் சொல்ல, சக்தி மறுத்தான்.

''இது வனம்... உன் ராஜதிமிரை என்னிடம் காட்டாதே. நீ விலகு,'' என்றான் வசிஷ்ட புத்திரனான சக்தி. ஆனால், கல்மாஷபாதன் விலகாமல் சக்தியை அடிக்க தன்வசம் இருந்த சவுக்கைப் பயன்படுத்தவும் ரிஷியான சக்தி அடுத்த நொடியே ராட்சஷ புத்தியுள்ள நீ ராட்சஷனாகக் கடவது,'' என்று சபித்துவிட்டான்.

அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கம் வந்த விஸ்வாமித்திரர், தன்பங்குக்கு கல்மாஷ பாதனை சபித்தார். ''கல்மாஷபாதா... நீ இனி நரமாமிசம் தின்னும் கொடிய நிலையை அடைவாய்,'' என்றார். இதுதான் சமயமென வசிஷ்டரின் நூறு புத்திரர்களையும் தின்று விடும்படி தூண்டினார். கல்மாஷபாதனும் தனக்கு சாபமளித்த சக்தியில் தொடங்கி வசிஷ்ட புத்ரர்கள் நூறு பேரையும் விழுங்கி ஏப்பம் விட்டான்.

தனது நூறு பிள்ளைகளையும் குறிப்பாக வேதம் முழுவதும் கசடறக் கற்று, தனக்கு இணையாக விளங்கிய தன் மகன் சக்தியை, விஸ்வாமித்திரரால் ஏவி விடப்பட்ட கிங்கரன் என்னும் பிசாசு கொன்று விட்டதை அறிந்த வசிஷ்டர் பெரும் புத்திர சோகத்திற்கு ஆளானார்.

'வசிஷ்டர் ஒரு பிரம்மரிஷி... திரிகால ஞானி.....வேதநெறி வழுவாதவர்... இவரையே கர்மவினை புத்திர சோகமாய் வந்து கவ்வியதை நாம் இங்கு எண்ணிப் பார்த்து மனதில் கொள்ள வேண்டும்.

பிறந்து விட்ட நிகழ்கால பிறப்பில், நாம் மகாத்மாவாகவே இருந்தாலும் கர்மவினை விடாது. இதற்கு திரேதாயுக காலமும் விதிவிலக்கில்லை. இப்படி புத்திர சோகத்துக்கு ஆட்பட்ட வசிஷ்டர் பெரும் ஞானியாக இருந்தும் தனக்கு ஏற்பட்ட துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார். அந்த தடுமாற்றத்தில் அவர் எடுத்த முடிவு தான் ஆத்மஹத்தி எனப்படும் தற்கொலை!

வசிஷ்டரா தற்கொலைக்கு முனைந்தார் என்று ஆச்சரியம் தோன்றும். புத்திர சோகம் பிரம்மரிஷிகளைக் கூட விடாது என்பதற்கு சான்று வேண்டுமே!

தற்கொலைக்கு முனைந்த வசிஷ்டர் நேராக மேருமலை உச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து கூப்பிய கரங்களோடு குதித்து உயிரை விடப் பார்க்கிறார். ஆனால், மேரு அவர் உயிரை வாங்க மறுக்கிறது.

''பிரம்மரிஷி... உம் உயிரை நான் முடித்து எனது பவித்ரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்றும் கேட்கிறது. வசிஷ்டரின் புத்திர சோகத்தின் முன் அதன் குரல் எடுபடவில்லை. தீ மூட்டி நெருப்பில் குதிக்கிறார். அக்னி பகவானும் அவிந்து போய், ''மகரிஷி என்னையும் அழுக்காக்கி விடாதீர்கள்,'' என்று கதறுகிறான். வசிஷ்டர் விடுவதாயில்லை. கடலில் போய் குதிக்கிறார். கடலும் ஏற்க மறுக்கிறது. ஓடும்நதியில் பாறையைக் கட்டிக் கொண்டு விழுகிறார். அந்தக் கட்டுக்களை நதியே அவிழ்த்து விட்டு வசிஷ்டரையும் ஜாக்கிரதையாக கரையில் சேர்க்கிறது. ''உங்கள் உயிரை வாங்கிய பாவம் எனக்கு வேண்டாம்,'' என்கிறது. கட்டவிழ்த்தலுக்கு 'விபாசை' என்று பெயர்.

வசிஷ்டரின் கட்டுக்களை அவிழ்த்த காரணத்தாலேயே அந்த நதிக்கு இன்றும் 'விபாசை' என்று பெயர். இந்த நதியில் மூழ்கி எழுபவர்களுக்கு துன்பக்கட்டு அகலும். நீண்ட ஆயுள் ஏற்படும் என்பது இதனாலேயே உண்டானது.

வசிஷ்டருக்கோ புத்திரசோகம் தீரவே இல்லை. ''ஒன்றுக்கு நூறு மக்களைப் பெற்றும் நிர்கதியாகி விட்டேனே? ஒரு பாவமும் செய்யாதிருந்தும் கர்மவினை விஸ்வாமித்திரர் வடிவில் வந்து பழி தீர்த்துக் கொண்டு விட்டதே? இப்படிப்பட்ட மானிடப்பிறவியும் ஒரு பிறப்பா? இந்த பிறப்பில் பிரம்மரிஷி என்கிற பட்டத்துக்கும் பவிசுக்கும் மட்டும் குறையில்லை! இந்த பட்டத்தால் என்ன

புண்ணியம்? இதனால், ஒரு பிள்ளையை எனக்காக மிச்சம் வைக்க முடிந்ததா? இப்படி ஒரு பிறப்பாளனாய் இருப்பதற்கு

ஆத்மஹத்தி செய்து கொண்டு ஒரு வேதாளமாய் மாறி விடுவது எவ்வளவோ மேலாயிற்றே?'' என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறார் வசிஷ்டர். உலக மாயை அவரை அப்படி எல்லாம் கேட்க வைக்கிறது.

இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டும். இத்தனை துக்கத்திலும் வசிஷ்டர் விஸ்வாமித்திரரை துளி கூட நிந்திக்கவில்லை. அவரால் தான் பிள்ளைகள் அனைவரும் இறந்து பட்டனர். அப்படி நிகழ காலன், விஸ்வாமித்திரரை பயன்படுத்திக் கொண்டதாகத்தான் அவர் கருதினார்.

இந்நிலையில் என்ன செய்தால் உயிர் பிரியும் என்கிற கேள்வியோடு அவர் வனத்தில் நடந்து செல்கையில் அவரைப்

பின்தொடர்கிறாள் அவரது மருமகளான சக்தியின் மனைவி அதிருஸ்யந்தி. அவளுக்குள் இருந்து வேதம் ஓதும் மழலைக்குரல் ஒலிக்கிறது. வசிஷ்டர் ஆச்சரியப்பட்டு அதிருஸ்யந்தியிடம், 'இது எப்படி சாத்தியம்?' என்ற கேட்க, ''என் கருவில் வளரும் தங்கள் பேரன் தான் வேதம் ஓதிய படி உள்ளான். தங்களின் பிள்ளையான சக்தியின் வாரிசுக்குள்ளும், அவருடைய வேதக்கல்வி தொடர்கிறது. தங்கள் பிள்ளை, ஒவ்வொரு திசுக்குள்ளும் வேத சப்தம் அடங்கிக் கிடக்கும் வகையில், அதை உணர்ந்து பயின்றது தான் அதற்குக் காரணம். அதனாலேயே, அவரோடு கூடிய என்னுள்ளும் அவரது கருவாக வளரப் பெற்று, முழுவடிவமும் ஏற்பட்ட விட்ட நிலையில், வயிற்றுக்குள்ளேயே வேத முழக்கம் செய்யத் தொடங்கி விட்டது. இந்தக் குழந்தையை இனி பிரசவிக்க வேண்டியது மட்டுமே என் கடன். நீங்கள் புத்திர சோகத்தால் தற்கொலை செய்து கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு வாரிசு உருவாகி விட்டது. உங்களுக்கு வாரிசு உள்ளது. உங்கள் மூத்தமுகன் 'சக்தி'யை காலம் பறித்துக் கொண்டாலும், அவர் வாரிசு உருவாகி விட்டது. எனவே, உங்கள் துக்கத்தை போக்கிக் கொண்டு நீங்கள் இந்தப் பேரப்பிள்ளையை வளர்த்து ஆளாக்க ஜீவனோடு இருக்க வேண்டும்' என்று வேண்டுகிறாள் அதிருஸ்யந்தி.

வசிஷ்டரும் பெரிதும் மகிழ்ந்தார். தான் வாழ்வதில் ஒரு அர்த்தமிருப்பதாக கருதத் தொடங்கினார். அப்போது மீண்டும் சோதனையாக, அந்த காட்டில் கிங்கரப்பிசாசாக திரிந்து கொண்டிருக்கிற கல்மாஷபாதன் திரும்ப வந்தான்.

- தொடரும்

இந்திரா சவுந்தரராஜன்






      Dinamalar
      Follow us