sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (10)

/

கிருஷ்ணஜாலம் - 2 (10)

கிருஷ்ணஜாலம் - 2 (10)

கிருஷ்ணஜாலம் - 2 (10)


ADDED : டிச 15, 2017 10:46 AM

Google News

ADDED : டிச 15, 2017 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ணனே தன் புதல்வன் என தெரிந்ததும், குந்தி அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் புதைந்து போனாள். அந்த துடிப்போடு பேசினாள்.

'கிருஷ்ணா... என் மனம் இப்போது எல்லையில்லாத ஆனந்தத்தை அடைந்து விட்டது. எங்கே, எப்படி இருப்பானோ என்னும் கவலைக்கெல்லாம் மாமருந்தாக, ஒரு அரசனாக, வள்ளலாக அவன் இருப்பதை எண்ணி என் நெஞ்சு குளிர்ந்து விட்டது.

இத்தனை நாளாக என் அருகில் இருந்த என் பிள்ளையால் உணர முடியாதவளாக இருந்து விட்டேனே கிருஷ்ணா!' என கண்ணீர் மல்கினாள் குந்தி.

'அத்தை! நான் ஒன்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய் தானே?'.

'இது என்ன கேள்வி கிருஷ்ணா... என்னிடம் உனக்கில்லாத உரிமையா? எதை வேண்டுமானாலும் கேள். அதே சமயம் உனக்கு தெரியாத பதில்களும், என்னிடம் இருக்கிறதா என்ன? ஆச்சர்யமாயிருக்கிறது.''

'அத்தை, அவதார புருஷன் என்பதற்காக, நீ நினைப்பதை எல்லாம் என்னால் எண்ணிவிட முடியுமா?'

'ஏன் முடியாது.. நீ நடிக்காதே..'

'துரியோதனாதியர்கள் சொல்வதையே நீயும் சொல்கிறாயே அத்தை'

'தவறாக கருதிவிடாதே. நான் செல்லமாக சொன்னேன்.'

'பரவாயில்லை.. நான் கேட்க நினைத்ததை கேட்டு விடுகிறேன். ஒரு வேளை உன் பிள்ளை மதிப்பாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?'

'கிருஷ்ணா... என் இதயத்தோடு விளையாடாதே! எங்கே எப்படி இருந்திருந்தாலும் நான் ஒன்றாகவே நினைப்பேன். எந்தத்தாயும் அப்படியே நினைப்பாள்.'

'அப்படி என்றால் பஞ்சபாண்டவர் வரிசையில் கர்ணனையும் சேர்த்து விட்டாய் என சொல்..'

'நான் சேர்ப்பதா? நீ சொன்ன மறுகணமே, கர்ணன் என் பிள்ளைகள் வரிசையில் தானாக சேர்ந்து விட்டான். இந்த உண்மையை அறிந்தால், என் பிள்ளைகளும் பூரித்துப் போவர். அவ்வளவு ஏன் இந்த யுத்தமே நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.'

'அப்படியா?'

'என்ன கிருஷ்ணா.. அப்படியா என சந்தேகமாக கேட்கிறாய்?'

'நான் என்ன செய்யட்டும்..கர்ணன் இருக்கும் இடம் அப்படிப் பட்டதாயிற்றே?'

'அதுவும் உண்மை தான்.. ஆனாலும் நான், அவனது தாய் என்று தெரிந்தால் என்னைப் போல அவனும் பூரிப்பான் தானே?'

'அப்படியா?'

'கிருஷ்ணா.. என்ன திரும்பவும் இப்படிக் கேட்கிறாய்?'

'பாசம்குருடானதுஎன கேள்விப்பட்டிருக்கிறேன். உன் மூலம் அதை நிதர்சனமாக காண்கிறேன்.'

'என்ன சொல்கிறாய்?'

'அத்தை! மழையாகும் நீர்த்துளிகளை காண முடியும். ஆவியாகும் நீர்த்துளிகளை காண இயலாது. ஒன்று மேலிருந்து கீழ் என்றால், இன்னொன்று கீழிருந்து மேல்.'

'புரியும்படி சொல்'

'என்னை ஏன் ஆற்றோடு விட்டாயம்மா என அவன் கேட்டால் நீ என்ன சொல்வாய்? நீ ஆயிரம் சொன்னாலும் அவனுக்கு புலனாகுமா'

'உண்மை. நீ சரியாக சொன்னாய்.. துரியோதனன் ஆதரிக்காமல் போயிருந்தால், அவன் இந்த உயரத்தில் இருக்க முடியாது.'

'அப்படி இருக்க எப்படி அவன் உன் விருப்பப்படி நடந்து, யுத்தமும் இல்லாமல் போகும் அத்தை?'

'கிருஷ்ணா... என் மனதில் பட்டதை பேசினேன். இப்போது நீ விரிவாகக் கூறவும் புரிகிறது. சகோதரர்களே, களத்தில் மோதப் போவதை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை.'

'கர்ணனின் பிறப்பு ரகசியம் எல்லோருக்கும் தெரிந்தால் அதன்பின் என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை அத்தை.'

'கிருஷ்ணா.. இப்படி பேசி என்னை ஆழம் பார்க்காதே, எங்கள் ஒரே பலம் நீ தான்! நல்வழியை நீ காட்டியே தீர வேண்டும்.'

'அத்தை.. என் பேச்சை கேட்டிருந்தால் தான் யுத்தமே இல்லையே.. இனி நான் வழிகாட்டுவது என்பது எப்படி?'

'கிருஷ்ணா.. வழி காண முடியாத இடத்திலும் வழி காண முடிந்தவன் நீ. இதற்கு மேல் உன்னிடம் பேச எதுவும் இல்லை. கர்ணனை நான் வளர்க்காமல் கைவிட்டதற்கு பிராயச்சித்தமாய், அவன் விருப்பப்படியே நடக்க விரும்புகிறேன். அவன் என்னை தாராளமாய் தண்டிக்கட்டும். அவனுக்கு நான் எல்லா வகையிலும் கட்டுப்படுவேன்.'

குந்தி கண்ணீர் வழிய பேசி முடித்தாள். கிருஷ்ணன் அவள் விழிநீரைத் துடைத்து விட்டான். ஆனந்தமாய் மார்போடு அணைத்துக் கொண்டவன், 'உன்னோடு பேசியது போல் கர்ணனிடமும் பேசுகிறேன். நீ சொன்னதை சொல்கிறேன். என்ன தான் நடக்கிறது என பார்ப்போம்.'

கிருஷ்ணன் சொன்ன விதம் குந்தியை அமைதியடையச் செய்தது.

'அத்தை. இந்த கர்ண ரகசியம் நாமிருவர் மட்டுமே அறிந்ததாக இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.'

'கிருஷ்ணா... இனி உன் சித்தம். நீ ஆட்டுவிக்கிறாய், நான் ஆடுகிறேன். அவ்வளவு தான்' என்றாள் குந்தி.

கிருஷ்ணன் தனக்கே உரித்தான மாய புன்னகையை உதிர்க்கத் தவறவில்லை!

கர்ணனின் மாளிகை! கிருஷ்ண ரதம் முகப்பில் நின்றது.

'ராஜாதி ராஜர், ராஜ மார்த்தாண்டர்

யாதவாதி தீரர், யவ்வன புருஷர்...

துவாரகாதிபதி கிருஷ்ண ராஜர் பராக்... பராக்...' எனும் கட்டியக்காரனின் குரல் கர்ணனின் பத்தினி சுபாவின் காதுகளில் விழவும் ஓடி வந்தாள் அவள்!

அந்த கிருஷ்ண விஜயம் அவள் நம்ப முடியாத ஒரு அதிசயம்! அதே சமயம் கர்ணனும் குரல் கேட்டு வந்தான். அவன் முகத்தில் சலனம். சுபா அதிர்ந்தாள்.

'பிரபு.. என்ன இது? கிருஷ்ண பிரபுவின் விஜயம் நம் மாளிகையில் நிகழ்ந்திருக்கும் நிலையில், தாங்கள் ஏதோ மாதிரி நிற்கிறீர்களே.. இன்று காலை முதலே பல சுப சகுனங்கள்... அதன் காரணம் இப்போது புரிகிறது.' என்றாள் சுபா.

'சுபா.. இது நான் எதிர்பார்த்த ஒன்று! நீ இதை ஒரு மகிழ்ச்சியாக கருதி பேசுகிறாய். கிருஷ்ணன், என் எதிரிகளுக்கு உதவிக் கொண்டிருப்பவன். இப்போது கூட யுத்தத்தை எந்த வகையில் நிறுத்தலாம் என்ற எண்ணத்துடன் வந்திருக்கிறான். அவன் பெரிய மாயாவி. அவனைப்பற்றி உனக்குத் தெரியாது' என்றான் கர்ணன்.

'அதற்காக மாளிகை தேடி வந்திருப்பவரை இப்படிப் பேசுவது சரியா? ஒரு பராரி கூட இந்த மாளிகைக்கு வந்து ஏமாற்றமுடன் திரும்பிச் சென்றதில்லையே...? யார் எதைக் கேட்டு வந்தாலும் ஒரு நொடி கூட யோசிக்காமல் வாரி வழங்கி, மனதை குளிர்விப்பதையே குறிக்கோளாக கொண்ட தாங்களா தயங்கி நிற்கிறீர்கள்?'

'சரியாகச் சொன்னாய் சுபா... கிருஷ்ணனும் என் தர்ம சிந்தையைக் கொண்டே என்னைக் கட்ட வந்திருக்கிறான். ஆனால் அது என்னிடம் நடக்காது.'

கர்ணன், சுபாவிடம் சொல்லும் போதே கிருஷ்ணன், அவர்களை பார்த்து விட்டான். சுபா ஓடிச் சென்று கிருஷ்ண பாதங்களில் விழ முற்பட்டாள். கர்ணனும் வரவேற்றான்.

தொடரும்

இந்திரா சவுந்திரராஜன்






      Dinamalar
      Follow us