sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கற்பக விநாயகர்

/

கற்பக விநாயகர்

கற்பக விநாயகர்

கற்பக விநாயகர்


ADDED : ஆக 26, 2014 04:18 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டகாரண்ய வனத்தில் விப்ரதன் என்ற வேடன் இருந்தான். ஒருசமயம், மழை பெய்யாமல் நீர்நிலைகள் வற்றிப் போயின. வனப்பகுதி வறண்டது. பறவைகளும், விலங்குகளும் உணவு தேடி வேறு இடம் பெயர்ந்து விட்டன. விப்ரதன் வேட்டையாடுவதற்கு வழியின்றித் தவித்தான். பசி, தாகத்துடன் அலைந்தான். காட்டு வழியில் செல்வோரைத் தடுத்து வழிப்பறி செய்தே சாப்பிடும் நிலைக்கு ஆளானான்.

ஒருநாள் அந்த வழியாக அந்தணர் ஒருவர் வந்தார். அவரை விப்ரதன் தடுத்த போது, அவர் பயந்து ஓடினார். வழியில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது.

அதற்குள் சென்று ஒளிந்து கொண்டார். விப்ரதனும் கோயிலுக்குள் நுழைந்தான். அங்கிருந்த விநாயகர் விப்ரதனின் வாழ்வை மாற்றியமைக்க திருவுள்ளம் கொண்டார். விப்ரதன் விநாயகர் சிலையைப் பார்த்தான். பார்த்தவனுக்கு, ஏனோ கண்ணை எடுக்கவே மனம் வரவில்லை.

'ஆகா...இப்படியும் கூட ஒரு தெய்வம் இருக்குமா?' என்று அதன் அழகில் சொக்கி நின்றான். இனம் புரியாத பரவச நிலைக்கு ஆளானான். தன்னை மறந்து அப்படியேதியானத்தில் ஆழ்ந்து விட்டான். இதற்குள் அந்தணர் தப்பி விட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த அவனுக்கு புத்தி மாறியது.

மீண்டும் பசிக்கு உணவில்லாமல் வழிப்பறியில் ஈடுபட கிளம்பினான். வழியில், முக்காலர் என்ற மகரிஷி தென்பட்டார். அவரை மறித்து, தன்னிடம் இருந்த வில்லைக் காட்டி அச்சுறுத்தினான். கலங்காத முனிவர் சிரித்தபடி விப்ரதனை நோக்கினார். அவருடைய பார்வை விப்ரதனை ஈர்த்தது. மீண்டும் உள்ளத்தில் தெளிவு உண்டாக, தன்னை மன்னித்து ஆசியளிக்கும்படி வேண்டினான்.

முனிவரும், தன் கையில் இருந்த கமண்டல நீரை விப்ரதன் மீது தெளித்து ஆசிர்வதித்தார். ஒரு காய்ந்த மரக்கிளையை கையில் கொடுத்து, மகாகணபதி மந்திரத்தை உபதேசித்தார். அதை விடாமல் ஜெபித்து வரும்படி கூறி விட்டு புறப்பட்டார்.

விப்ரதனும் நம்பிக்கையுடன் ஜெபித்து வர, மந்திர சித்தி பெற்றதன் அடையாளமாக காய்ந்திருந்த மரக்கிளை துளிர் விட்டதோடு, விநாயகரைப் போலவே தும்பிக்கை ஒன்றும் அவனது புருவத்தின் மத்தியில் தோன்றியது. விப்ரதனுக்கு காட்சியளித்த விநாயகர், ''பக்தனே! புருவ மத்தியில் தும்பிக்கை பெற்ற நீ

'புருசுண்டி' என பெயர் பெற்று புகழடைவாய். மந்திர ஜெபத்தால் முளைத்த இந்த மரம் கற்பக மரம் என பெயர் பெறும். யார் எதைக் கேட்டாலும் வழங்கும் வல்லமை இதற்கு உண்டாகும். நீயும் யோகம், ஞான மார்க்கங்களைப் பின்பற்றி என் திருவடியை அடையும் பேறு பெறுவாய்'' என வாழ்த்தினார்.

கற்பக விருட்சம் உருவாவதற்கு காரணமான விநாயகருக்கு'கற்பக விநாயகர்' என்ற பெயர் உண்டானது. விநாயகர் சதுர்த்தி நன்னாளில் தன்னை வழிபட்டவருக்கு வேண்டிய வரம் அனைத்தும் அருள்பவராக கற்பகவிநாயகர் விளங்குகிறார்.






      Dinamalar
      Follow us