sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்பே சிவம்

/

அன்பே சிவம்

அன்பே சிவம்

அன்பே சிவம்


ADDED : மார் 25, 2022 11:28 AM

Google News

ADDED : மார் 25, 2022 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவிரியாற்றங்கரையில் உள்ள சிவத்தலம் திருச்சாத்தமங்கை. இங்கு மலர்க்கண்ணியம்மையுடன் அவயந்திநாதர் என்ற பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் சிவத்தொண்டு புரியும் வேதியர் குடும்பத்தில் பிறந்தவர் திருநீலநக்கர். சிவபக்தரான இவர் மனைவியுடன் ஒருநாள் கோயிலுக்கு சென்றார்.

நீலநக்கருக்கு உதவியாக அவரது மனைவி சிவபூஜைக்குரிய பூக்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அயவந்திநாதர் மீது விஷம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக் கண்டதும் பரபரப்புடன் வாயினால் ஊதினார். சிவலிங்கத்தின் மீது சென்ற பூச்சி கீழே விழுந்தது. துரதிர்ஷ்டவசமாக அம்மையாரின் எச்சில் துளிகள் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதையறிந்த திருநீலநக்கர் கொதித்து எழுந்தார்.

'அறிவில்லாதவளே! எம்பெருமானின் மேனி எச்சில்பட்டு விட்டதே' என அடிக்க கை ஓங்கினார். கணவரின் முன் செய்வதறியாமல் நின்ற அவர், ''பொன்னார் மேனியனின் திருமேனி புண்ணாகாமல் இருக்க சிலந்தியை ஊதி விரட்டியது பாவமா'' என்று சொல்லி அழுதார். கணவரோ சமாதானமாகவில்லை.

'அபச்சாரம் செய்த நீ இன்று முதல் என் மனைவி அல்ல. நான் உன் கணவனும் அல்ல' என்று சொல்லி பூஜையை புறக்கணித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நீலநக்கரின் மனைவி அன்றிரவு கோயில் வாசலிலேயே தங்கி விட்டார். நீலநக்கரின் கனவில் சிவன் தோன்றி, ''நீலநக்கரே! என் உடம்பைப் பாரும். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளமாகி விட்டன. என் மீது அன்பு கொண்ட உன் மனைவியை கோபிப்பது முறையா'' எனக் கேட்டார். கண் விழித்த நீலநக்கர் பதறியடித்து மனைவியைத் தேடி கோயிலுக்கு வந்தார். ஈசனே கனவில் தோன்றி தன்னிடம் குறைபட்டுக் கொண்டதை தெரிவித்தார். உண்மையான அன்பு கொண்டவர்கள் தவறே செய்தாலும் சிவன் மன்னித்தருள்வார் என்ற உண்மையை உணர்ந்தார். மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.

அன்று முதல் இருவரும் அன்பே சிவம் என்பதை உணர்ந்து அவயந்திநாதரை வழிபட்டனர். திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கைக்கு ஒருமுறை வந்தார். நீலநக்கரும், அவரது மனைவியும் ஞானசம்பந்தரை வரவேற்று மகிழ்ந்ததோடு அவருடன் சிவத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டனர். வாழ்வின் இறுதியில் ஞானசம்பந்தரின் திருமணத்தில் பங்கேற்ற அவர்கள் சிவஜோதியில் கலந்து முக்தி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us