sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பேசும் தெய்வம் (02)

/

பேசும் தெய்வம் (02)

பேசும் தெய்வம் (02)

பேசும் தெய்வம் (02)


ADDED : பிப் 09, 2018 11:33 AM

Google News

ADDED : பிப் 09, 2018 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவந்த மேனி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீறுடன் காட்சியளித்த துறவியை வணங்கினார் இளைஞர் ஒருவர்.

''தம்பி... யார் நீ? என்னப்பா வேண்டும்'' எனக் கேட்டார் துறவி.

''சுவாமி.... திருநெல்வேலி காட்டுப் பகுதியில் வாழும் வேடன் நான். சிவபக்தனான எனக்கு உயிர்களை கொல்வதில் விருப்பமில்லை. எனக்கு உபதேசிக்க வேண்டும்,'' என்றார் இளைஞர்.

''சிவனருளால் உன் விருப்பம் நிறைவேறும்.'' என்ற துறவி ஐந்தெழுத்து மந்திரம் உபதேசித்தார். இளைஞரின் உடல் சிலிர்த்தது. அன்று முதல் மந்திரத்தை உருவேற்ற தொடங்கினார் அவர். கோடி முறை உருவேறியதும், மனதில் பேரானந்தம் எழுந்தது. கவி பாடும் புலமை உண்டானது. அவரது திறமை கண்ட அனைவரும் 'புலவர்' என போற்றினர். புலவருக்கும், மரகதம் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவள் அறிவு, அழகு, ஒழுக்கம் என அனைத்திலும் சிறந்தவள். ஆனால், அவளுடன் பிறந்த சகோதரர்கள் ஏழு பேரும் குணத்தில் நேர்மாறானவர்கள்.

கொள்ளையடிப்பது, மனம் போல செலவழிப்பது என்று வாழ்ந்தனர்.

மைத்துனர்களின் செயலை கண்டு கொள்ளாத புலவர், ஏடும், எழுத்தாணியுமாக இருந்தார். சிவன் புகழ் பாடுவதையே லட்சியமாக கொண்டார். ஐந்தெழுத்து மந்திரத்தை உயிராக மதித்தார். ஆனால், வாழ்வில் விதி விளையாட தொடங்கியது. தாய் வீட்டு சீதனம் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்? இயன்ற வரையில் மரகதம், வீட்டுச்செலவை சமாளித்தாள். அக்கம்பக்கத்தில் கடன் வாங்கினாள். கொடுத்தவர்கள் எத்தனை நாள் பொறுப்பார்கள்? நெருக்கடி உண்டானது. மனைவியின் நிலை கண்ட புலவர் திகைத்தார்.

அந்நிலையில், ''அண்ணன்மார்களுக்கு வழி காட்டும் தெய்வம், நமக்கும் வழி காட்டாதா என்ன?'' என்றாள் மரகதம். புலவர், ''சீ! சீ! திருடி பிழைப்பதும் ஒரு வாழ்வா?'' என்றார். மரகதம் வாய் மூடினாள். வாயை மூடலாம்; ஆனால் வயிற்றை மூட முடியுமா? இந்நிலையில் மைத்துனர்கள் வீடு தேடி வந்தனர். ''மாமா... உங்கள் புலமையை எல்லாம் மூடை கட்டி வைத்து விட்டு எங்களுடன் வாருங்கள்! கொள்ளை அடித்து பணம் தேடலாம்,'' என்றனர்.

புலவர், தன் மனக்குமுறலை பாடல்களாக பாடினார். பாடினால் பசி தீருமா என்ன? நிலைமை மிக மோசமானது.

வேறு வழியின்றி ஒரு அமாவாசையன்று புலவர் மனைவியிடம், 'மரகதம்.... இன்றிரவே நான், உன் சகோதரர்களுடன் திருட செல்கிறேன். தகவல் சொல்லியனுப்பு,'' என்றார் புலவர்.

அதன்படி மைத்துனர்களுடன் புறப்பட்ட புலவர் மனதிற்குள், ''சிவனே! இது என்ன சோதனை,'' என வருந்தினார். வாய் நமசிவாய மந்திரம் ஜபித்தது. கால்கள் தள்ளாடியபடி களவாட நடந்தன. அனைவரும் திருப்புவனம் எனும் ஊரில் வாழ்ந்த பணக்காரரின் மாளிகையை அடைந்தனர்.

புலவரை ஒருபுறம் நிற்க வைத்து விட்டு, வீட்டிலிருந்த பொருட்களை மூடையாக கட்ட தொடங்கினர் மைத்துனர்கள்.

விழித்தபடி நின்றிருந்தார் புலவர். அந்த மாளிகையின் உரிமையாளர் புலமை மிக்க சிவபக்தர். தினமும் சிவன் மீது பாடல் பாடி விட்டு படுப்பது அவர் வழக்கம்.

அப்படி ஒரு நாள் பாடும் போது, '' தலையில் இரந்துண்பான்; தன் உடலில் பாதி மலை

மகளுக்கு ஈந்து மகிழ்வான்;- உலையில்''-

என்பதோடு நிறுத்தி விட்டு, அதற்கு மேல் முடிக்க இயலாமல் தவித்தார்.

இப்படி ஒரு மாத காலம் நீடித்தது.

சரளமாக பாடும் எனக்கு ஏன் இந்த அவல நிலை?- என்ற கவலையில் ஆழ்ந்து நோய்க்கு ஆளானார். இந்த நிலையில் தான் புலவரும், மைத்துனர்களும் மாளிகையில் திருட நுழைந்தனர். அன்றும், தடைப்பட்ட பாடலை பாடினார் பணக்காரர்... மறைந்திருந்து கேட்ட புலவர் 'இருப்பு அன மேனியானார் என்றாலோ'' என முணுமுணுத்தார். அதை கேட்ட பணக்காரர் வியப்புடன், 'ஆமாம் திருப்புவன ஈசன் திறம்' என பாட்டை முடித்தார். புலவர் நின்ற திசை நோக்கி ஓடி வந்தார் பணக்காரர். இதை அறிந்த மைத்துனர்கள், பயத்தில் மூடைகளை போட்டு விட்டு தப்பித்தனர்.

மாளிகை எங்கும் உடனே விளக்குகள் ஏற்றப்பட்டன. அங்கிருந்த புலவர் நடந்தது அனைத்தையும் பணக்காரரிடம் விவரித்தார். புலவரின் பக்தியை உணர்ந்த பணக்காரர் கட்டியணைத்து மகிழ்ந்தார். பசிக்கு உணவிட்டதோடு, சிவனின் பெருமைகளை விளக்க சொல்லி கேட்டார். பொழுது புலர்ந்தது. புலவரின் மைத்துனர்களை மாளிகைக்கு வரவழைத்து, பொன்னையும் பொருளையும் வழங்கினார் பணக்காரர்.

புலவரின் மனைவியிடம், ''அம்மா! இன்று முதல் நீ என் சகோதரி. ஆகையால் இனி நானும் புலவரின் மைத்துனனே' என உறவு பாராட்டினார்.

18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த இப்புலவரின் பெயர் 'தலைமலை கண்ட தேவர்'. இவர் பாடிய பாடல் தொகுப்பு மருதுார் அந்தாதி.

தொடரும்

அலைபேசி: 97109 09069

பி.என். பரசுராமன்






      Dinamalar
      Follow us