sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எதிலும் நீயே ஆதாரம் குருவாயூரப்பா...

/

எதிலும் நீயே ஆதாரம் குருவாயூரப்பா...

எதிலும் நீயே ஆதாரம் குருவாயூரப்பா...

எதிலும் நீயே ஆதாரம் குருவாயூரப்பா...


ADDED : மார் 09, 2023 11:13 AM

Google News

ADDED : மார் 09, 2023 11:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா, உன் கோயில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா... உலகம் என்னும் தேரினையே ஓடச்செய்யும் சாரதியே, காலம் என்னும் சக்கரமே உன் கையில் சுழலும் அற்புதமே எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம் உன்,சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன்பாதம்''

என்ற பாடல் வரிகளை கண்டவுடன் காதில் இன்னிசை ரீங்காரமிடுகிறதா? அப்படியானால் வாங்க இக்கோயில் வரலாறு தந்த ஆசிரியர் பற்றி தெரிந்து கொள்வோம்.

1560ல் கேரளாவில் உள்ள மேல்புத்துாரில் பிறந்தவர் நாராயணபட்டத்திரி. இவரின் தகப்பனார் மாத்ருத்தர். பண்டிதராக இருந்த தன் தந்தையிடமே ஆரம்பக்கல்வி பயின்றார். ரிக்வேதத்தை மாதவாச்சாரியார், தர்க்கசாஸ்திரத்தை தாமோதராச்சாரியார் என்பவரிடம் கற்றுக்கொண்டார். அச்யுத பிஷாரடி என்ற குருவிடம் வியாகரணம் என்ற மிகக் கடினமான இலக்கணத்தைக் கற்று முடித்தபோது இவருக்கு வயது பதினாறு.

இலக்கணம் கற்றுக் கொடுத்த குருவிடம் இருந்த வாதநோயை தன் யோகசக்தியால் அவருக்கு செய்யும் உபகாரமாக விரும்பி வாங்கி கொண்டார். இந்நோயை எப்படி தீர்ப்பது என தனது ஊரிலிருந்த ஜோதிடரிடம் பணியாளர் மூலம் கேட்டு அனுப்பினார்.

அதற்கு அவரோ, ''முதல் அவதாரமான மச்சாவதாரத்தை வைத்து பாடு. நோய் தீரும்'' என பரிகாரம் சொன்னார். பணியாளரோ பதறியவாறு குருவாயூர் சுவாமி சன்னதியை அநாச்சாரம் பண்ணச் சொல்லுகிறார் என்றார். விஷயத்தை கேட்ட பட்டத்திரி அதன் ரகசியத்தை தெரிந்து கொண்டார். சன்னதிக்கு சென்ற பட்டத்திரி நுாறு நாட்கள் சுவாமியிடம் ஒவ்வொரு முறையும் நேரிடையாக பேசியவாறு சம்மதம் பெற்றே நாராயணீயம் என்கிற காவியத்தை இயற்றினார். தன் நோயும் முழுமையாக நீங்கப்பெற்றார்.

குருவாயூரப்பனே அவரிடம், ''இவ்வூரில் உள்ள எல்லாம் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இவ்விடம் மட்டும் உனக்கு சொந்தம். இனிமேல் இது பட்டத்திரி மண்டபம் என அழைக்கப் பெறட்டும்'' என்றார். எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இதற்குண்டு. இந்நுால் முழுவதும் இருவரும் பேசும் பாவனையில் அமைந்திருக்கும். குருவாயூரப்பனை தரிசனம் செய்யும் போது இடது பக்கத் திண்ணையில் ஒரு செப்புப் பட்டயத்தில் மலையாளம், தமிழில் நாராயண பட்டத்திரி நாராயணீயம் எழுதிய இடம் என எழுதப்பட்டு இருக்கும். இந்நுாலை வீட்டில் வைத்து பக்தி சிரத்தையோடு வாசிப்பவர் களுக்கும் பூஜிப்பவர் களுக்கும் தீராத நோயும் தீர வேண்டும் என்பது குருவாயூரப்பனிடம் பட்டத்திரியார் வாங்கிய வரமாகும்.






      Dinamalar
      Follow us