ADDED : பிப் 28, 2020 02:24 PM

தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்க சுவாமி கோயிலில் 108 சிவலிங்கங்கள் ஒரே சன்னதியில் உள்ளன.
ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமஸே்வரத்தில் சிவபூஜை செய்தார் ராமர். ஆனாலும் ராவணனின் சகோதரர்களான கரண், துாஷனைக் கொன்ற பாவம் தன்னைத் தொடர்வதாக அவர் உணர்ந்தார். அதற்காக 108 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணினார். அதில் ஒன்று குறையவே, அனுமன் மூலமாக காசியில் இருந்து லிங்கத்தை வரவழைத்தார். அதன்பின் சிவபூஜை செய்த ராமருக்கு பாவம் விலகியது. இத்தலமே பாபநாசம் எனப் பெயர் பெற்றது.
இங்குள்ள பிரதான லிங்கத்தை 'ராமலிங்க சுவாமி' என்றும், அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை 'அனுமந்த லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள அம்மன் பர்வதவர்த்தினி என அழைக்கப்படுகிறாள்.
சிவனுக்கு எதிரில் நந்தியுடன் காமதேனுவும் உள்ளது. இக்கோயிலில் 108 லிங்கங்களும் மேற்கு நோக்கி இருப்பதால் உங்கள் விருப்பம் உடனே நிறைவேறும். மூலவர் விமானம் ராமஸே்வரம் ராமநாதர் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்கம் சன்னதி விமானம்
காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளன. இத்தலத்திற்கு 'கீழ் ராமஸே்வரம்' என்றும் பெயருண்டு. காசி, ராமஸே்வரம் செல்ல இயலாதவர்கள் நேர்த்திக்கடனை இங்கு செலுத்துகின்றனர்.
பிதுர்தோஷம் நீங்க கோயில் முகப்பில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள். ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிவபூஜை செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. காசி விசாலாட்சி, அன்னபூரணி, பைரவர், சூரியன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
* தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 25 கி.மீ.,
* கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ.,
விசஷே நாட்கள்
மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
நேரம்: காலை 6:30-12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97901 16514
அருகிலுள்ள தலம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் 25 கி.மீ.,