sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகின் 15 பெரிய கோயில்கள்

/

உலகின் 15 பெரிய கோயில்கள்

உலகின் 15 பெரிய கோயில்கள்

உலகின் 15 பெரிய கோயில்கள்


ADDED : ஏப் 18, 2018 11:58 AM

Google News

ADDED : ஏப் 18, 2018 11:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா

* கி.பி 1113 - 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.

* 162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.

* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.

02. ரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம்

* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.

* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.

* தென்னிந்தியாவின் பெரிய (239 அடி) ராஜ கோபுரம் இங்குள்ளது

* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.

03. அக்ஷர்தம் கோயில், டில்லி

* மகான் சுவாமிநாராயணருக்காக கட்டப்பட்டது.

* 23 ஏக்கர் பரப்பு கொண்டது.

* கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.

* ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.

04. நடராஜர் கோயில், சிதம்பரம்

* பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலமாகும்.

* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.

* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.

* கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன.

05. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

* கி.பி.11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழன் கட்டியது.

* 54 அடி சுற்றளவு, 23 அடி உயர பாணமுடன் மூலவர் இருக்கிறார்.

* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.

* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் இங்குள்ளது.

06. அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

* 24 ஏக்கர் பரப்பு, 6 பிரகாரம், 9 ராஜகோபுரமும் கொண்டது.

* கிழக்கு ராஜ கோபுரம் 216 அடி உயரம் கொண்டது.

* 142 சன்னிதி, 22 பிள்ளையார், 306 மண்டபங்கள் உள்ளன.

* திருக்கார்த்திகையன்று 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படும்.

07. ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

* கி.பி. 1509ல் கட்டப்பட்டது. பஞ்சபூதங்களில் மண்ணுக்குரிய தலம்.

* 25 ஏக்கர் பரப்பும், 190 அடி உயர கோபுரமும் கொண்டது.

* முக்தி தலங்கள் ஏழில் இதுவே முதன்மையானது.

* சிவலிங்கம் மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது.

08. வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

* 23 ஏக்கர் பரப்பும், 180 அடி உயர கிழக்கு கோபுரமும் கொண்டது.

* இங்குள்ள கற்சங்கிலிகள், சிற்பக்கலைக்கு சான்று.

* குளத்திலுள்ள அத்திவரதருக்கு 40 ஆண்டுக்கு ஒரு முறை பூஜை

* இங்கு தங்கம், வெள்ளியாலான பல்லிக்கு சன்னதி உள்ளது.

09. ஜம்புகேஸ்வரர் கோயில், திருச்சி

* 18 ஏக்கர் பரப்பு கொண்ட இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.

* கோச்செங்கட்சோழன் கட்டிய 70 சிவாலயங்களில் முதல் தலம்.

* தரை மட்டத்திற்கு கீழே மூலவர் இருப்பதால், கருவறையில் எப்போதும் நீர் கசியும்.

10. நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி

* 2000 ஆண்டு பழமை மிக்கது. 14 ஏக்கர் பரப்பு கொண்டது.

* தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.

* நடராஜரின் ஐந்து சபைகளில் தாமிர சபை இங்குள்ளது.

* சிவனுடன் பள்ளிகொண்ட பெருமாளும் காட்சியளிக்கிறார்.

11. மீனாட்சியம்மன் கோயில், மதுரை

* 2 தங்கவிமானம், 14 கோபுரம் உள்ளன. தெற்கு கோபுரம் 170 அடி.

* நடராஜர் (வலதுகால் ஊன்றி) கால் மாறி, ஆடிய நிலையில் உள்ளார்.

* சிவன் 64 திருவிளையாடல் நிகழ்த்திய தலம்.

* தமிழகத்திலுள்ள 366 மீனாட்சியம்மன் கோயில்களின் மூலக்கோயில்.

12. வைத்தீஸ்வரன் கோயில், நாகப்பட்டினம்

* 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளன.

* தங்கம், வெள்ளி கொடி மரங்கள் உள்ளன. செவ்வாய்க்குரிய தலம்.

* மருத்துவ கடவுளாக சிவன் அருள்புரியும் தலம்.

* திருச்சாந்து உருண்டை என்னும் மருந்து பிரசாதம் பிரசித்தம்.

13. தியாகராஜ சுவாமி கோயில், திருவாரூர்

* 30 ஏக்கர் பரப்பு கொண்டது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 98 அடி.

* ஆசியாவிலேயே பெரிய ஆழித்தேர், 30 ஏக்கரில் கமலாலய குளம் உள்ளன.

* 9 ராஜகோபுரம், 80 விமானம், 13 மண்டபம், 3 பிரகாரம் இங்குள்ளது.

* 24 உட்கோயில்கள், 365 சிவலிங்கம், 86 விநாயகர் சன்னதிகள் உள்ளன.

14. ஜெகந்நாதர் கோயில், பூரி, ஒடிசா

* கங்கர் குலமன்னன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டது.

* ஜகந்நாதர், பாலபத்திரர், சுபத்ரை மூவரும் மரச்சிற்பங்களாக உள்ளனர்.

* விழாவிற்காக 45 அடி உயர, 35 அடி அகலத்தில் புதிய தேர் செய்வர்.

* 12 ஆண்டுக்கு ஒருமுறை புதிய மூலவர்கள் மரத்தால் செய்யப்படுவர்.

15. லட்சுமி நாராயணன் கோயில், டில்லி

* 1939ல் ஜி.டி.பிர்லாவால் கட்டப்பட்டதால் பிர்லா மந்திர் என்பர்.

* பரப்பு 7.5 ஏக்கர். விஸ்வநாத் சாஸ்திரியால் நிர்மாணிக்கப்பட்டது.

* அனைத்து மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு காந்திஜி திறந்து வைத்தார்.

* பள்ளிகொண்டநிலையில், இங்கு விஷ்ணு இருக்கிறார்.






      Dinamalar
      Follow us