sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகின் தலைசிறந்த சொல் 'செயல்'!

/

உலகின் தலைசிறந்த சொல் 'செயல்'!

உலகின் தலைசிறந்த சொல் 'செயல்'!

உலகின் தலைசிறந்த சொல் 'செயல்'!


ADDED : ஏப் 18, 2018 11:57 AM

Google News

ADDED : ஏப் 18, 2018 11:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.24 - சாய்பாபா ஸித்தி தினம்

* அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, பயனுள்ள ஒரு செயலில் ஈடுபடுவது சிறந்தது.

* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னை எனக்கு கொடு' என கடவுளிடம் தினம் வழிபாடு செய்யுங்கள். * வாழ்க்கையே பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனை.

* கலியுகத்தில் கடவுளின் திருநாமம் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.

* கடவுள் மின்சக்தி. மனிதன் பல்பு. நாம் ஒளி வீசுவதற்கு கடவுளை நமக்குள் கொண்டு வர வேண்டும்.

* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் நேசிக்கிறீர்கள் என்று பொருள்.

* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே பேரின்பம்.

* கடவுளை பூரணமாக சரணடைந்து விட்டால், விதி செயலிழந்து விடும்.

* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மையாக நடக்கும் ஊழியர்களை மட்டுமேபிடிக்கும்.

* முற்றிய தேங்காய் நைவேத்யமாகும் தகுதி அடைவது போல, பக்குவம் அடைந்த உள்ளம் கடவுளின் திருவடியை அடையும்.

* உணவை மட்டுமல்ல; பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடுவதே வாழ்க்கை.

* கடவுள் வழங்கிய பாத்திரமான உள்ளத்தை துாய்மையாக பாதுகாப்பது நம் கடமை.

* மனம் எனும் வயலில் அன்பை பயிரிட்டு, சேவை எனும் நீர் பாய்ச்சுங்கள். இன்பம் என்னும் விளைச்சல் அறுவடையாகும்.

* மனத் துாய்மையின்றி கடவுள் பெயரை மட்டும் சொல்வது என்பது, காயச்சலின் போது மருந்தின் பெயரை மட்டும் சொல்வது போலாகும்.

* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆளக்கூடாது.

* உடல் நோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மன நோய்க்கோ தன்னலம் அற்ற சேவையே மருந்து.

* துன்ப இருளில் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் இதயத்தில் அருள் ஒளி பரவும்.

* உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைக்கும்.

* உடல் என்னும் இயந்திரம் இயங்க, உணவு என்பது எண்ணெய் போல அளவுடன் இருக்க வேண்டும்.

* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. வேண்டாத ஆசை உள்ளவனே ஏழை.

* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.

* கன்று வளரும் போதே அதற்கு கொம்பும் வளர்வது போல, செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.






      Dinamalar
      Follow us