ADDED : அக் 26, 2018 09:04 AM

* சவால்களை துணிந்து ஏற்றுக்கொள். வெற்றி பெற்றால் மற்றவர்களை வழிநடத்து. தோல்வி என்றால் அது உனக்கு வழிகாட்டும்.
* அனுபவம் வாழ்விற்கு வழிகாட்டும் நல்லாசிரியர். அதனோடு பேசி உறவாடு. இல்லாவிட்டால் உண்மையை உணர முடியாது.
* குறிக்கோள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்காக வாழ்வை அர்ப்பணி. எப்போதும் சிந்தித்து, அதை மையமிட்டு கனவு காண். மூளை, தசை, நரம்புகள் என உடம்பெங்கும் குறிக்கோளால் நிரப்பு. இதுவே வெற்றிக்கான வழி.
* தைரியமுடன் எழுந்து நில். பழி முழுவதையும் உன் தோள்களில் சுமந்துகொள். மற்றவரை குறை சொல்லாதே. உன்னைப் பாதிக்கும் எல்லாவற்றுக்கும் நீயே காரணம்.
* மற்றவரிடம் உள்ள நல்லதைக் கற்றுக்கொள். ஆனால் அவர்களைப் போல மாற முயலாதே. உன் சொந்தவழியில் அதை மாற்றிக் கொள்.
* அடிமை போல பணியாற்றாதே. எஜமானன் போல செயல்படு.
* இடைவிடாமல் வேலை செய். ஆனால் அதற்கு அடிமையாகாதே.
* எல்லா ஆற்றல்களும் உனக்குள் இருக்கிறது. எதையும், எல்லாவற்றையும் செய்யும் வலிமை பெற்றவன் நீ. பலவீனமானவன் என்று ஒருபோதும் எண்ணாதே. எழுந்து நின்று உனக்குள் புதைந்து கிடக்கும் தெய்வீக உணர்வை வெளிப்படுத்து.
உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்