/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் - உள்ளதைச் சொல்கிறார் ஆதிசங்கரர்
/
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் - உள்ளதைச் சொல்கிறார் ஆதிசங்கரர்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் - உள்ளதைச் சொல்கிறார் ஆதிசங்கரர்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் - உள்ளதைச் சொல்கிறார் ஆதிசங்கரர்
ADDED : மே 06, 2011 10:07 AM

மே 8 ஆதிசங்கரர் ஜெயந்தி
* உலக பொருட்களின் மீதுள்ள பேராசையை விட்டு, உழைப்பால் அடைந்ததை வைத்துக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
* இரவுக்குப்பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், குளிர்காலத்திற்குப் பின் வசந்தமும் மாறி மாறி வருகிறது. இதன்மூலம் காலம் விளையாடுவது தெரிகிறது. ஆயுள் தேய்ந்து கொண்டே வந்தாலும், நம்மை விட்டு விலகாமல் இருக்கும் வீண் ஆசைகள் நாம் உடனடியாக விட்டுவிட வேண்டும்.
* ஜடை தரித்தல், மொட்டையடித்தல், காவி அணிதல் இந்த வேடங்களால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மனதால் கடவுளை உணராமல் இந்த வேடங்களைப் போலித்தனமாக காட்டிக் கொள்வதில் பயனில்லை.
* விரோதியிடம் விரோதமாகவோ, நண்பனிடம் நட்புடனும், மகன் மற்றும் சுற்றத்தாரிடம் அன்பாகவோ இருக்க நினைக்க கூடாது, அனைவரிடமும் சமநோக்குடன் பழகினால் தான் இறைவனின் தன்மையையும், அருளையும் உணரமுடியும்.
* ஆசையை ஒடுக்கி, புலன்களை காத்து, சுவாசத்தை ஒழுங்காக்கி முறையாக ஜபமும் பிரார்த்தனையும் செய்தால் மனம் அலையாமல் இருப்பதுடன் கடவுள் மீதான சிந்தனையும் நிலைத்து நிற்கும்.
* நம்வாழ்நாளில் சந்திக்கும் ஒவ்வொரு நாளையும் இன்பம் மிகுந்த இனிய நாளாக்குவது நம் கையில் தான் உள்ளது. ஒவ்வொரு நாளையும் மகத்தான நாளாக்கிக் கொள்ள இக்கொள்கையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
* காலையில் எழுந்ததும் இரண்டு நிமிடங்களாவது கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நெற்றியில் கண்டிப்பாகத் திலகம், திருநீறு போன்ற சமயச் சின்னங்களைப் பூசிக் கொள்ளவும் வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமையிலாவது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, கடவுளை வழிபட வேண்டும்.
* உங்கள் அருகில் வசிப்பவர்களையும், உறவினர்களையும், ஏழைகளையும் அன்புடன் நேசிக்க வேண்டும்.
* அளவுக்கு மீறிப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் உங்களை நீங்களே வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணையைக் கொண்டு, நியாயமாகக் கிடைப்பதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவனுடைய வாழ்க்கை சுவை உடையதாக இருக்கும்.
* உடல் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய், பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக் கொண்டு நடக்கிறான் என்றாலும் உடல் மீது ஆசை மட்டும் விடவில்லை. இந்த வாழ்க்கை காலையில் இட்டு மாலைக்குள் அழிந்து விடும் கோலம் போன்றது. மரணம் உறுதியென்று தெரிந்தும் இந்த உடலின் மீதும், உலகின் மீதும், உறவின் மீதும், பொருளின் மீதும், பாசம் வைத்து திரிவதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது?

