/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
அம்மாடியோவ்... பிரம்மாண்ட அனுமன்
/
அம்மாடியோவ்... பிரம்மாண்ட அனுமன்
ADDED : ஜன 08, 2021 05:08 PM

அம்மாடியோவ்...இவ்வளவு உயரமா?'' என்று வியக்கும் வண்ணம் ஆந்திர மாநிலம், பரிதாலாவில் இருக்கும் அனுமனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்.
வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் என இவரை அழைக்கின்றனர். 2003ல் நிறுவப்பட்ட இவரது சிலையின் உயரம் 135 அடி(41 மீ). வலது கையால் அபயம் அளித்தபடியும், இடது கையில் தண்டாயுதத்தை பிடித்தபடியும் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரது கால்களின் முன்பு தரையில் வளைந்தபடி வால் உள்ளது. வெண்ணிறம் கொண்ட இவரது உடை பாதம் வரை நீண்டுள்ளது. கழுத்தில் மாலையும், தலையில் கிரீடமும் அலங்கரிக்கின்றன. இவரை நினைத்தாலே வெற்றி தான்.
எப்படி செல்வது: விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நெடுஞ்சாலையில் 25 கி.மீ., துாரத்தில் பரிதாலா.
விசேஷ நாட்கள்: அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி
நேரம்: காலை 5:30 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 098481 94497
அருகிலுள்ள தலம்: விஜயவாடா கனகதுர்கை கோயில் (25கி.மீ.,)
நேரம்: அதிகாலை 4:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 0866 - 242 3600