ADDED : ஜன 08, 2021 03:39 PM

* வீட்டிலும், வெளியிலும், எங்கும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* உண்மையை பேசுங்கள். ஏமாறவோ, ஏமாற்றவோ இடம் அளிக்காதீர்கள்.
* தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.
* கோயில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை, வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
* வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.
* தீமை எனத் தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.
* அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
* பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறந்து விடும்.
* கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.
* தியானத்தின் மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும்.
* மனதில் நல்லெண்ணம் வளர வேண்டும். மறந்தும் தீமையை அனுமதிக்காதீர்.
* காலத்தை வீணாக்கினால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போகும்.
* பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது.
* இடையூறு குறுக்கிட்டாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக நில்லுங்கள்.
பின்பற்றச் சொல்கிறார் பாரதியார்