தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அற்புதங்களை நிகழ்த்தும் அம்மன்

அற்புதங்களை நிகழ்த்தும் அம்மன்

அற்புதங்களை நிகழ்த்தும் அம்மன்


ADDED : ஜூன் 10, 2022 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2022 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கதகவென்று எரியும் தணலால் நிரம்பியிருக்கிறது ஒருக்குழி. அதை நோக்கிச் செல்கிறார் ஒருவர். அவரோடு ஜோடி சேர்ந்து செல்லும் மற்றொருவர் கையில் தாம்பாளம் இருக்கும். அதில் மல்லிகைப்பூக்கள் பரப்பி அதன்மேல் மஞ்சள்துணி விரிக்கப்பட்டிருக்கும். முன்னே சென்றவர் ஏதோ தங்ககட்டிகளை எடுப்பதுபோல குழியில் இருந்து நெருப்பு துண்டங்களை கொஞ்சம் அள்ளி எடுப்பார். அதை அப்படியே மஞ்சள் துணியில் வைக்கிறார். அதன் பிறகு நடப்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

மஞ்சள் துணியை நெருப்போடு சுற்றி எடுத்து, அதை அருகே இருக்கும் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மடியில் கட்டுகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்.. எங்கு நடக்கிறது என்று பார்ப்போமா வாருங்கள்.

எந்நேரமும் வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலை அது. எங்கு பார்த்தாலும் மக்கள் நிரம்பி வழியும் கூட்டம். அதுதான் சென்னை அரும்பாக்கம் நெடுஞ்சாலை. அங்கு தான் அருள்பாலிக்கிறாள் பாஞ்சாலி அம்மன்.

பாஞ்சாலி என்றால் திரவுபதி. அவளை யாருக்காவது தெரியாமல் இருக்குமா... அவள்தான் மகாபாரதத்தில் வரும் கதாநாயகி. கிருஷ்ணரின் சகோதரி. அவளுக்காக கட்டப்பட்ட கோயில்தான் அது.

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பல மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பக்தை ஒருவர், வேப்பமரத்தின் கீழ் ஒரு அம்மன் சிலை ஒன்றைக் கண்டெடுத்தார். வேப்பமரத்தின் கீழ் கிடைத்ததால் மாரியம்மனாக இருக்கலாம் என அவர் நினைத்தார். அப்படி அவர் நினைக்கும்போது பாஞ்சாலி என்று அசரீரி கேட்டது.

இப்படி உருவானதுதான் பாஞ்சாலி அம்மன் கோயில். சரி அம்மன் மடியில் நெருப்பை கட்டும் நிகழ்ச்சி எப்போது நடக்கிறது என்று பார்ப்போம். வைகாசி விசாகத்தில் (ஜூன் 12) நடைபெறும் திருவிழாவின் போது நடக்கிறது, தீயினை திரவுபதியின் மடியில் கட்டும் சம்பவம். எதற்காக இப்படி செய்கிறார்கள். உதாரணமாக உங்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது. தீக்குழியில் இறங்கிவிட்டீர்கள். அந்த நிமிடங்களை சிறிது யோசித்து பாருங்கள். எப்படி இருக்கும் உங்களின் மனநிலை. அந்த நெருப்பு உங்களை சுடக்கூடாது என்பதற்காகத்தான் அம்மன் மடியில் நெருப்பை கட்டிக்கொள்கிறாள். குழந்தைகளாகிய நாம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே ஒரு தாயின் முயற்சி இது. அதுதான் தாயின் குணம்.

இந்த திருவிழாவின் போது அன்னதானமும் நடைபெறுகிறது. அதில் ஒரு கவளம் அன்னத்தையாவது ருசித்து பார்த்தால் நீங்கள் அம்மனின் அன்புக்கு உரியவராகிவிடலாம்.

கோயிலின் படிகளின் மீது ஏறியதும் அம்மனை பார்த்துவிடலாம். அவளை நெருங்க நெருங்க கற்பூரம், மல்லிகைப்பூ வாசனையும் கலந்து நமது மூக்கில் நடனமாடும். அந்த நினைவில் அம்மனை பார்த்ததும் உயிரில் ஏதேதோ மாயாஜால உணர்வுகள் அசைந்தோடும். மனம் லேசாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். பிரகாரத்தை சுற்றும்போதே மகாலட்சுமி, வைஷ்ணவி, ருத்ராம்சி, நாகாத்தமன், நாகலிங்கம், நவகிரகங்களையும் பார்க்க முடியும்.

எப்படி செல்வது: கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,

விசஷே நாள்: வைகாசி வளர்பிறை வெள்ளி, நவராத்திரி

நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 94440 16040

அருகிலுள்ள தலம்: ஆதிகேசவப்பெருமாள் கோயில் 11 கி.மீ.,

நேரம் : காலை 6:30 - 11:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2464 3873, 94440 35591

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us