தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மருதாணி வச்சா திருமணம்

மருதாணி வச்சா திருமணம்

மருதாணி வச்சா திருமணம்


ADDED : ஜூன் 21, 2022 11:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2022 11:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் கட்டாயம் நடந்தே தீர வேண்டியவற்றில் ஒன்று. ஒருவருக்கு 25 வயது ஆனாலே போதும். பார்ப்பவர்கள் எல்லாம் 'எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற' என்ற கேள்விகள் சொல் அம்புகளாக இதயத்தை துளைக்கும். அதுவரைக்கும் சிட்டுக்குருவிபோல் சந்தோஷமாக பறந்துகொண்டிருந்த மனம், சிறகு ஒடிந்த பறவைபோல் ஆகிவிடும். அடுத்து என்ன... உடனே பெற்றோர்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நல்ல ஜோசியரின் வீட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்துவிடுவர். ஜோசியரோ 'குருபலம் இன்னும் உங்கள் பிள்ளைக்கு வரல. இந்த பரிகாரம் செய்யுங்க. அந்த கோயிலுக்கு போங்க' என்று பரிகாரத்தை சொல்வார். இதுமாதிரியான பல விஷயங்களை செய்தும் 'டும் டும்' சத்தம் கேட்கவில்லையா. உங்களுக்குத்தான் இருக்கவே இருக்கு மருதாணி இலை. என்னடா... திருமணத்திற்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா... குழம்பாதீர்கள். சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தில் உள்ள செங்கச்சேரி அம்மன் கோயிலுக்கு வாருங்கள். பிறகு பாருங்கள். மலை அளவிற்கு கனமாக இருந்த உங்களின் மனம், இலை போல் மெல்லியதாக மாறிவிடும்.

பவுர்ணமி மாலை அன்று கோயிலிற்குள் நுழைந்தால்போதும். எல்லோரும் கூட்டம் கூட்டமாக வரிசையில் நிற்பார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்ற ஆச்சர்யம் அங்கு சென்றால் உங்களுக்கு புரியும். செங்கச்சேரி அம்மன் திருவிளக்கின் வெளிச்சத்தில் தித்திப்பாய் ஜொலித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு விசஷே அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அருகே மருதாணி இலை தட்டில் வைக்கப்பட்டிருக்கும். திருமணம் என்னும் பந்தத்தில் நுழைய அதுதான் நுழைவுச்சீட்டு. ஆமாங்க... அந்த இலையால் அம்மனுக்கு அர்ச்சனை நடக்கும். இந்த பூஜையில்தான் திருமணம் ஆகாதவர்கள் கலந்து கொள்வர். பூஜை முடிந்த பிறகு அர்ச்சகர் தரும் மருதாணி இலைகளை அரைத்து வலது உள்ளங்கையில் மட்டும் இட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் இதை உபயோகிக்கக்கூடாது. மீதமுள்ள இலைகளை பூச்செடியில் சேர்த்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து 3 பவுர்ணமிகள் பூஜையில் கலந்து கொண்டால் உள்ளங்கையில் சிவப்பு நிறம் மறைவதற்குள் வாழ்க்கைத்துணையின் கையை பிடித்துவிடலாம்.

இந்தக்கோயிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால்... அம்மனின் வலது புறத்தில் கடிதப்பெட்டி ஒன்று இருக்கும். நாம் எப்படி பிறருக்கு செய்தி அனுப்ப தபால்பெட்டியை பயன் படுத்துகிறோமோ... அதுபோல்தான் இதுவும். நமது வேண்டுதல்கள் எழுதி அதில் வைக்கலாம். ஒவ்வொரு வெள்ளி மாலை கடிதங்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்படும். பிறகு பக்தர்கள் முன்னிலையில் படித்து கூட்டுப்பிரார்த்தனை செய்வர்.

இதற்கு சக்தி அதிகம் என்பதால் உடனடியாக உங்களது வேண்டுதல் அம்மனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

எப்படி செல்வது : சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 18 கி.மீ.,

விசஷே நாள்: பவுர்ணமி பூஜை, ஆடி வெள்ளி நவராத்திரி

நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 94445 53160

அருகிலுள்ள தலம்: கபாலீஸ்வரர் கோயில் 19 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணி

தொடர்புக்கு: 044 - 2464 1670

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us