sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கடவுள் விரும்பும் காணிக்கை

/

கடவுள் விரும்பும் காணிக்கை

கடவுள் விரும்பும் காணிக்கை

கடவுள் விரும்பும் காணிக்கை


ADDED : அக் 12, 2018 02:44 PM

Google News

ADDED : அக் 12, 2018 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.19 - ஷீரடிபாபா ஸித்தி தினம்

* பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

* கடவுளைத் தேடுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

* கடவுளை தேடி எங்கும் அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் இருக்கிறார்.

* கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே சாத்தியமாகும்.

* கடவுள் மீது முழு கவனத்தையும் செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

* உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.

* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவு நிறைந்த மனம் மட்டுமே போதும்.

* முன்னேற வேண்டுமானால், விரதம் இருக்க வேண்டாம். கடவுளைச் சரணடைந்தால் போதும்.

* எல்லோரையும் நேசியுங்கள். யாரிடத்திலும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார்.

* ஆணவம் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.

* எளிமையாக வாழுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள்.

* உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி கவலைப்படாதே. உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம்.

* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணியங்களே.

* எதிரில் உள்ளவர் பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசுங்கள்.

* உண்மை எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.

* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழச்செய்து பெரும்பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.

* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.

* பணம் எவ்வளவு இருந்தாலும், செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.

* பொறுமை, பக்தியை ஒருபோதும் கைவிடாதீர். அதற்கான பலன் தாமதமாகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது.

சொல்கிறார் ஷீரடி பாபா






      Dinamalar
      Follow us