sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அறுபதாம் கல்யாண தலம்

/

அறுபதாம் கல்யாண தலம்

அறுபதாம் கல்யாண தலம்

அறுபதாம் கல்யாண தலம்


ADDED : நவ 07, 2024 08:53 AM

Google News

ADDED : நவ 07, 2024 08:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது மனித வாழ்க்கை. இதில் சமுதாயத்திற்கு எப்படி எல்லாம் உதவலாம் என சிந்திப்பதே பெரிய மனிதருக்கான அடையாளம். அந்த அடையாளத்தை வெளிப்படுத்தி பிறருக்கு ஆசியளிக்கும் ஸ்தானத்திற்கு ஒருவரை உயர்த்துகிறது அறுபது, எண்பதாம் கல்யாணங்கள். அவற்றை நடத்த ஏற்ற தலமாக உள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நாயகன்பேட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில். இது காஞ்சி மஹாபெரியவரின் ஆசியுடன் கட்டப்பட்டது.

பாற்கடலில் இருந்து அமிர்தம் கிடைத்ததும் விநாயகரை வழிபடாமல் தேவர்கள் அதை சாப்பிடச் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர் அதை மறைத்து வைத்தார். பின் அவரை வணங்கி அமிர்த கலசத்தை பெற்றனர். சிவபூஜை செய்வதற்காக கலசம் கீழே வைத்த போது, அந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. இப்படி அமுதத்தில் இருந்து உருவானதால் 'அமிர்தகடேஸ்வரர்' என்ற திருநாமம் சிவனுக்கு ஏற்பட்டது. அதைப் போல் இப்பகுதியில் குடிநீருக்காக குளம் வெட்டியபோது சுயம்பு லிங்கம் தென்பட்டது. அந்த லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து 'அமிர்தகடேஸ்வரர்' எனவும், அம்மனுக்கு 'அபிராமி' எனவும் பெயர் சூட்டினர். இதனால் இத்தலம் 'வடதிருக்கடவூர்' எனப்படுகிறது.

இங்கு சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிேஷக விழாக்களை நடத்துகின்றனர். இத்தலத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும். எமபயம் நீங்கும்.

எப்படி செல்வது: காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ.,

விசேஷ நாள்: பிரதோஷம், அமாவாசை, சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 91504 64530, 93429 09989

அருகிலுள்ள கோயில் : காஞ்சி காமாட்சி அம்மன் 13 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)

நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 044 - 2722 2609






      Dinamalar
      Follow us