
அபிஷேகம் செய்த தீர்த்தம் கோமுகி வழியே வெளியேறுவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால் அபிஷேக தீர்த்தம் கண்ணுக்கு புலனாகாமல் பாதாள உலகை அடையும் கோயில் எது தெரியுமா... சத்தீஸ்கர் மாநிலம் ஜன்ஜீர் சம்பா பகுதியிலுள்ள காராத் லட்சுமணேஸ்வரர் கோயில்தான் அது. சத்தீஸ்கரின் காசி எனப்படும் இக்கோயில் ராமாயண வரலாற்றுடன் தொடர்பு கொண்டது.
உயரமான கோயிலை சுற்றி கோட்டை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கோபுரம், விமானம் பிரமிடு வடிவத்தில் உள்ளன. சபா, சத்திய, நந்தி, போக மண்டபங்களை கடந்தால் மூலவரை தரிசிக்கலாம். அபிேஷகம் செய்யும் தீர்த்தம் சிவலிங்கத்தில் உள்ள துளைகளின் வழியே பாதாள உலகை அடைகிறது.
ராமனின் தம்பியான லட்சுமணன் இலங்கையில் நடந்த போரில் இறந்த போர்வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் சுவாமிக்கு 'லட்சுமணேஸ்வரர்' எனப் பெயர் வந்தது.
இப்பகுதியை ஆட்சி செய்த ரத்னாபூர் என்ற மன்னர் திருப்பணி செய்து வழிபட்டார். காலப்போக்கில் சிதிலம் அடைந்து கோயில் மண்ணுக்குள் புதைந்தது. இந்திய தொல்பொருள் துறையினர்
1873ல் மராமத்து பணிகளை நிறைவேற்றி நிர்வகித்து வருகின்றனர். இக்கோயிலை இந்திய நினைவுச் சின்னமாக மத்திய அரசு 1958ல் அறிவித்தது.
எப்படி செல்வது:
* ராய்ப்பூரில் இருந்து 120 கி.மீ.,
* பிளாஸ்பூரில் இருந்து 65 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி பூஜை, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
அருகிலுள்ள கோயில்: பிளாஸ்பூர் - ரத்தன்பபூர் மகாமாயா 85 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 77353 55526