sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மல்லிகை மகாலட்சுமி

/

மல்லிகை மகாலட்சுமி

மல்லிகை மகாலட்சுமி

மல்லிகை மகாலட்சுமி


ADDED : அக் 17, 2025 08:33 AM

Google News

ADDED : அக் 17, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லட்சுமி கடாட்சம் பெற பூவில் அவதரித்த சென்னை பூந்தமல்லி புஷ்பவல்லித் தாயாரை தீபாவளியன்று தரிசிப்பது சிறப்பு. ராமானுஜரின் குருநாதர் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலம் இது.

1009ல் இங்கு வாழ்ந்த வீரராகவர், கமலாயருக்கு மகனாக பிறந்தவர் திருக்கச்சி நம்பிகள். தினமும் காஞ்சிபுரம் வரதராஜரை வழிபடும் வழக்கம் கொண்ட இவர் ஆலவட்ட சேவை (விசிறி வீசுதல்) செய்தார். ஆனால் முதுமையில் இவரால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை. அப்போது காஞ்சி வரதராஜரே பூந்தமல்லிக்கு நேரில் தோன்றி காட்சியளித்தார். அந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

புண்ணியகோடி விமானத்தின் கீழ் பின் தலையில் சூரியனுடன் மூலவர் இருக்கிறார். சூரியத்தலமான இங்கு ஞாயிறன்று வழிபடுவது நன்மை தரும். பிறந்த ஜாதகத்தில் சூரிய தசை நடப்பவர்கள், தந்தை, மகன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், உடல்நலம் இல்லாதவர்கள் பலன் பெற செவ்வரளி மாலை சாத்துகின்றனர்.

இங்குள்ள தாயார் மல்லிகைப்பூவில் அவதரித்ததால் புஷ்பவல்லித்தாயார் எனப்படுகிறார். இதனால் 'பூவிருந்தவல்லி' எனப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் 'பூந்தமல்லி' என மாறியது. புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகைப்பூ சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வைகாசி திருவிழாவின் போது புஷ்ப யாகம் பெரிய அளவில் நடக்கும். அப்போது பள்ளியறையில் சயனக்கோலத்தில் பெருமாள் காட்சியளிப்பார்.

பெருமாளுக்கு விசிறி சேவை செய்ய விரும்பிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். 'காவிரிக்கரை குளிர்ச்சியாக இருப்பதால் தனக்கு விசிறி சேவை வேண்டாம்' என ரங்கநாதர் தெரிவித்தார். பின்னர் அவர் திருப்பதி ஏழுமலையானிடம் சென்ற போது, ' மலை மீது குடியிருப்பதால் தனக்கும் சேவை வேண்டாம்' என்றார்.

இறுதியாக காஞ்சிபுரத்தில் வரதராஜர் யாகத்தீயில் தோன்றியவர் என்பதால் உக்கிரமாக இருப்பதைக் கண்டு விசிறி சேவையைத் தொடங்கினார். இங்கு நம்பிகளால் வழிபடப்பட்ட ரங்கநாதர், ஏழுமலையான் சன்னதிகள் உள்ளன. மூவருக்கும் தனித்தனி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. பங்குனி மாதம் மூவரும் திருக்கச்சி நம்பிக்கு கருட சேவை அளிப்பர்.

மாசி மாதம் திருக்கச்சி நம்பியின் அவதார விழா நடக்கும். அப்போது நம்பி இயற்றிய 'தேவராஜ அஷ்டகம்' பாடி பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வர்.

எப்படி செல்வது: சென்னை - காஞ்சிபுரம் வழியில் 20 கி.மீ.,

விசேஷ நாள் : ராமானுஜ ஜெயந்தி, திருக்கச்சி நம்பிகள் அவதார விழா, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், பங்குனி உத்திரம்.

நேரம்: காலை 6:30 - 11:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 98401 22515, 044 - 2627 2066

அருகிலுள்ள கோயில்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் 21 கி.மீ., (சர்ப்பதோஷம் தீர)

நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2716 2236






      Dinamalar
      Follow us