
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள குத்ரோலியில் குடியிருக்கும் கோகர்ண நாதேஸ்வரரை வழிபட்டால் நோயின்றி வாழலாம். நாள்பட்ட நோயும் குணமாகும்.
கர்நாடகாவின் ஒரு பகுதியை முன்பு துளுநாடு என அழைத்தனர். இப்பகுதியில் பில்லவ இன மக்கள் வசித்தனர். இவர்களின் தலைவர் பக்தி இயக்கம் நடத்திய நாராயண குருவை சந்தித்து கோயில் கட்ட வேண்டும் என ஆலோசித்தார். அதன்படி 1912ல் இப்பகுதியில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் சிவன் கோயில் கட்டப்பட்டது. தமிழக சிற்பக்கலை அமைப்பில் 1991ல் ராஜகோபுரமும் எழுப்பப்பட்டது.
இங்குள்ள கல்யாணி தீர்த்தம் என்ற தெப்பக்குளத்தின் நான்கு கரைகளிலும் சிவன் சிலைகள், தேவர்கள் பூஜிக்கும் சிலைகளும் உள்ளன. சிவனின் தலையில் இருந்து கங்கை பூமிக்கு வருவது போன்ற சிலை கண்ணைக் கவர்கிறது. நாராயண தீர்த்தம் என்ற கும்ப வடிவிலான கிணறும் உள்ளது. கடற்கரை அருகில் கோயில் இருந்தாலும் நாராயண தீர்த்தம் நன்னீராக உள்ளது. சுவாமியை கோகர்ணநாதேஸ்வரர் என்றும், அம்பாளை அன்னபூரணி என்றும் அழைக்கின்றனர்.
அன்னபூரணி, ஆஞ்சநேயர் சிலைகள் தங்கத்தால் ஆனவை. கல்வி, கலைத்துறையில் சாதிக்க இங்கு 'சர்வசேவை' வழிபாடு செய்கின்றனர். அதாவது இங்குள்ள கோகர்ண நாதேஸ்வரர், அன்னபூரணி, மகாகணபதி, சுப்ரமணியர், காலபைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், நாராயணகுரு சன்னதிகளை அலங்கரித்து ஆரத்தி நடத்துவதை சர்வ சேவை என்கின்றனர்.
ஸ்ரீருத்ர மந்திரத்தை ஜபித்து சுவாமிக்கு அபிேஷகம் செய்கின்றனர். இதனால் நோயின்றி வாழலாம். நாள்பட்ட நோய், எதிரி பயம் மறையும்.
எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 6 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், நாக பஞ்சமி, தசரா.
நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 0824 - 249 4040, 249 5740
அருகிலுள்ள கோயில்: கத்ரி மஞ்சுநாதர் 4 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)
நேரம்: காலை 6:30 - 1:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி