தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தேக்கடி தேவி

தேக்கடி தேவி

தேக்கடி தேவி


ADDED : ஜூன் 12, 2025 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரளாவின் தேக்கடியின் காவல் தெய்வமான காளியை தேக்கடி தேவி என மக்கள் அழைக்கின்றனர். உங்கள் குறை தீர வெள்ளியன்று நடக்கும் குருதி பூஜையை தரிசியுங்கள். 150 ஆண்டுகளுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு மரத்தடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர்.

அதனருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கையம்மனுக்கு சன்னதி கட்டப்பட்டது.

விநாயகர், நாகேஸ்வரர், கருப்பசுவாமி, சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிேஷகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர அம்மனின் பாதத்தில் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் மனபயம் மறையும்.

இதனை நடை குருதிபூஜை என்கின்றனர். திருவிழாவின் போது தேவி புராணத்தை ஏழுநாள் பாராயணம் செய்வர். இதற்கு 'சப்தாஹம்' என்று பெயர்.

எப்படி செல்வது: மதுரையில் இருந்து கம்பம் வழியாக 130 கி.மீ.,

விசேஷ நாள்: சித்திரை ரோகிணி ஆராட்டு 10 நாள் உற்ஸவம்.

நேரம்: அதிகாலை 5:30 - 9:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 94473 89736, 99953 02059

அருகிலுள்ள கோயில் : குமுளி துர்கா கணபதி பத்ரகாளி கோயில்

நேரம்: அதிகாலை 5:30 - 11:00 மணி: மாலை 5:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 85478 54437, 94958 39237

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us