sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருமணம் நடக்க...

/

திருமணம் நடக்க...

திருமணம் நடக்க...

திருமணம் நடக்க...


ADDED : செப் 27, 2024 12:58 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மயிலாப்பூரில் மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரிகிறார். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது.

மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் மகாவிஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் தவம் செய்தார். அவரது பக்திக்கு இரங்கிய மகாலட்சுமி, இங்குள்ள குளத்தில் குழந்தையாக வந்தாள். 'அமிர்தவல்லி' எனப் பெயரிட்டு வளர்த்தார் பிருகு. திருமண வயது வந்ததும் மகாவிஷ்ணு மணமகனாக வந்து அமிர்தவல்லியை ஏற்றுக் கொண்டார். அவரே இங்கு மாதவப்பெருமாளாக வீற்றிருக்கிறார். தாமரை போல அழகான முகத்துடன் இருப்பதால் உற்ஸவர் 'அரவிந்த மாதவன்' எனப்படுகிறார். 'அரவிந்தம்' என்றால் 'தாமரை'.

நாரத மகரிஷியிடம், 'பூலோகத்தில் தோஷம் இல்லாத தலம் எது' என வியாசர் கேட்ட போது இத்தலத்தையே குறிப்பிட்டார். கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

அமிர்தவல்லித்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்ந்த கலவையை தாயாருக்கு நைவேத்யம் செய்கின்றனர்.

இங்கு உள்ள 'மணிகைரவம்' என்னும் கிணற்றில் பூத்த அல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். ஐப்பசி சதயம் நட்சத்திரத்தை ஒட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கும். பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரும் மகாவிஷ்ணுவைச் சந்தித்த நிகழ்வின் அடிப்படையில் 'திருக்கோவிலுார் வைபவம்' இங்கு நடக்கிறது. மகான் ராமானுஜர் கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரம் கோயிலுக்குச் சென்ற போது, அங்குள்ள உற்ஸவர் சிலையை டில்லி பாதுஷாவின் மகள் எடுத்துச் சென்றதை அறிந்தார். உடனடியாக டில்லிக்குச் சென்று பெருமாள் சிலையை மீட்டார்.

இந்த வரலாற்றின் பின்னணியில் 'செல்வப்பிள்ளை' சன்னதி இக்கோயிலில் உள்ளது. பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், அனுமன் சன்னதிகளும் உள்ளன.

எப்படி செல்வது

* கோயம்பேட்டில் இருந்து 12 கி.மீ.,

* எழும்பூரில் இருந்து 5 கி.மீ.,

விசேஷ நாள் : சித்திரை பிரம்மோற்ஸவம், மாசி தெப்பம், பங்குனி திருக்கல்யாணம்.

நேரம்: காலை 6:30 -- 11:00 மணி; மாலை 4:30 -- 9:00 மணி

தொடர்புக்கு: 044 -- 2498 5112

அருகிலுள்ள கோயில்: மயிலாப்பூர் பார்த்தசாரதி 3 கி.மீ., (நலமுடன் வாழ...)

நேரம்: காலை 6:00 -- 12:00 மணி; மாலை 4:00 -- 9:00 மணி

தொடர்புக்கு: 044 -- 2844 2462






      Dinamalar
      Follow us