sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனதிலே குழப்பமா...

/

மனதிலே குழப்பமா...

மனதிலே குழப்பமா...

மனதிலே குழப்பமா...


ADDED : டிச 15, 2023 11:14 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறீர்களா... எதற்கெடுத்தாலும் பயப்படுகிறீர்களா... உங்களுக்காகவே பெங்களூரு விபூதிப்புரத்தில் வீரபத்திரசுவாமி கோயில் கொண்டுள்ளார்.

முன்பு இப்பகுதியை சிவபக்தரான வீரபல்லாளன் என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு ஒருமுறை சிவபெருமானை அவரது அம்சமான வீரபத்திரர் வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. இதற்காக தவத்தில் ஆழ்ந்தார்.

மகிழ்ந்த சிவபெருமான் அவரது கனவில் வீரபத்திரராகவே காட்சியளித்தார். பின் தான் கண்ட வடிவிலேயே வீரபத்திரருக்கு சிலை வடித்து இங்கு பிரதிஷ்டை செய்தார்.

வடக்கு நோக்கியிருக்கும் இக்கோயிலில் வீரபத்திரருக்கு சிவபெருமானுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சிவபெருமானைப்போல் இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர். பின்புறம் ஒரு பீடத்தில் சிவலிங்கம் உள்ளது. சன்னதிக்கு வெளியில் இருந்து பார்க்கும் போது வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ள அமைப்பு வியக்க வைக்கும். இப்படி சிவலிங்கத்துடன் காட்சி தருவதால் இவரை 'லிங்க வீரபத்திரர்' என்றும் அழைக்கிறார்கள். எதிரில் நந்தி உள்ளது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசைகளில் விசேஷ ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை கடைசி திங்களன்று வீரபத்திரருக்கு விழா நடக்கிறது. அன்று காலையில் 'அக்னி பிரவேசம்' என்னும் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அப்போது கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்ப்பர். அதிலிருந்து அர்ச்சகர் நெருப்புத் துண்டுகளை கையால் எடுத்து சன்னதிக்கு கொண்டு வருவார். அந்த நெருப்பில் துாபமிட்டு சுவாமிக்கு தீபாராதனை செய்வார். பின் வீரபத்திரர் பல்லக்கில் எழுந்தருளி உலா செல்வார்.

இங்கு அருளும் பத்திரகாளியை 'காளிகாம்பாள்' ' என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இவளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுகின்றனர். மனக்குழப்பம், பயம் நீங்க வீரபத்திரருக்கு வெற்றிலை, எலுமிச்சை மாலை அணிவிக்கின்றனர்.



எப்படி செல்வது :பெங்களூருவில் இருந்து சுப்ரமணியபுரம் சாலை வழியாக 10 கி.மீ.,

விசேஷ நாள்: சிவராத்திரி, திருக்கார்த்திகை

நேரம்: காலை 7:00 - இரவு 9:30 மணி

தொடர்புக்கு: 080 - 2523 7234

அருகிலுள்ள தலம்: மைசூரு வைத்தியநாதர் கோயில் 82 கி.மீ., (விஷக்கடி நோய் குணமாக...)

நேரம்: காலை 6:30 - 1:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 98861 24419, 08227 - 273 413






      Dinamalar
      Follow us