ADDED : டிச 15, 2023 11:30 AM

இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் கி.மு. 497 - 501 க்குள் சனிபகவானுக்கு டார்கினியஸ் சூப்பர்பஸின் என்னும் ரோமானியரால் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இது கி.பி. 283 - 400 ல் எற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. இக்கோயிலை ரோமானிய செனட்டர் லுாசியல் முனிஷியாஸ் என்பவர் மீண்டும் புதுப்பித்தார். கிரேக்கர்களின் தெய்வமான குரோனஸிடனுக்கு சமமாக சனிபகவானை கருதினர்.
இவருக்கு டிசம்பர் 17 முதல் 23 வரை சனியை போற்றும் விழா நடத்தினர். மீண்டும் ஐநுாறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் அழிக்கப்பட்டது. இங்கு மிஞ்சி இருப்பது உயரமான உருண்டை வடிவில் உள்ள ஆறு துாண்கள். இந்தக் கோயில் சிதிலமடைந்த நிலையில் ரோமிலுள்ள கொலோசியம் பகுதி, பேருந்து, ரயில் நிலையம் அருகிலும், ரோமன் மன்றத்தின் மேற்கு முனையிலுள்ள கேபி டோலின் தென்கிழக்கு சரிவில் கிளிவஸ்கேடர் டோலினஸ் இடையே வடகிழக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இப்போது இது கோயிலாக இல்லை. உயரமாகவும் சிதிலமடைந்த கூரைகளுடன் காணப்படுகிறது.
- வி.ராமசுப்பு