
* நல்லவர் நட்பால் வாழ்வு பிரகாசமாகும்.
* பெரியவர்களின் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்.
* பெற்றோரை மதிப்பவர்களே நல்ல குழந்தைகள்.
* இக்கட்டான நேரத்தில் உதவி கேட்கும் போதுதான் ஒருவரின் குணத்தை தீர்மானிக்க முடியும்.* துன்பத்திற்கு மூலகாரணம் மனிதனின் முட்டாள்தனம்.
* கடவுள் அருள் இருந்தால் நினைத்தது நடக்கும்.
* புதிய விஷயத்தை கற்கும் போது கூச்சப்படுவது கூடாது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்திடு.
* சாந்தமான மனம் இருந்தால் சந்தோஷம் தானாக வரும்.
* பணமே பிரதானம். பணத்தால் தான் உலகம் இயங்குகிறது.
* நாக்கை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும்.
* நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப முடியாது.
* பிரச்னையில் உடனிருப்பவர்களே நல்ல உறவினர்கள்.
* துன்பத்தில் கை கொடுப்பவனே நல்ல நண்பன்.
* அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் இவர்களோடு வாக்குவாதம் செய்யாதே.
என்கிறார் சாணக்கியர்