
* அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம்.
* கடவுளை அடைய எளிய வழி பக்தி.
* கற்பக மரம் போல வழங்கும் வள்ளல் கடவுள் ஒருவரே.
* கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை.
* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.
* ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது.
* பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே.
* பசுவைத் தேடும் கன்று போல கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும்.
* பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் பயனில்லை.
* பக்தியுள்ளவனாக வாழு. அதே நேரம் மூடத்தனத்திற்கு இடம் அளிக்காதே.
* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும்.
* கடவுளை வெளியுலகத்தில் தேடாதே. மீறி தேடினால் அது அறியாமையே.
* கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம்.
* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.
* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே.
* முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடை.
சொல்கிறார் ராமகிருஷ்ணர்