sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

குருக்கால் மகாதேவர்

/

குருக்கால் மகாதேவர்

குருக்கால் மகாதேவர்

குருக்கால் மகாதேவர்


ADDED : ஜன 12, 2024 05:26 PM

Google News

ADDED : ஜன 12, 2024 05:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோயிலுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா அப்படியானால் உங்களுக்கான கோயில் இது. இக்கோயில் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க...

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறது ஆத்திசூடி. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது உலகநீதி. கோயில் இல்லாத ஊர் பெருங்காடு என்பார் நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர். இவை யாவும் கோயில் பற்றிய பொன்மொழிகள். ஒரு கிராமம், ஊர் என்று இருந்தால் அங்கு விநாயகர், முருகன், சிவன், பெருமாள், அம்பாளுக்கு என ஒரு கோயில் இருக்க வேண்டும் என்கிறது ஆகமம். அதுவும் ஓடும் நதிக்கரையோரத்தில் அமைந்த கோயில் பல சிறப்பினை உடையது.

நடமாடும் ஆதிசங்கரராக திகழ்ந்த காஞ்சி மஹாபெரியவர் ஒரு முறை தனது பக்தர்களுக்கு ''விளக்கே எரியாத கோயில்களுக்கு சென்று விளக்கேற்றியும், பூஜை நடத்தியும், அங்குள்ள சுவாமிக்கு பல திரவிய பொருட்களால் அபிேஷகம் செய்வித்தும் வழிபடுபவர்களுக்கு முன்ஜென்ம பாவம் முற்றிலும் நீங்கும். பல தலைமுறைக்கு நீடித்து நோய் நொடியின்றி வாழ்வர்'' என உபதேசம் செய்தார்.

இடிந்த இடர்பாடுகளுடன் வழிபாடு இல்லாத கோயில்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு குருக்கால் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயில். இது சித்தர் ஒருவரால் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பெற்றது. சுவாமியின் பெயர் மகாதேவர்.கோயிலின் கருவறை எண்கோண அமைப்பில் உள்ளது. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது என்பதற்கு ஏற்ப சுவாமியின் திருமேனி (உருவம்) கருவறையில் சிறிய வடிவமாயினும் வழிபடுபவருக்கு பேரருளை தருகிறது. கோயிலுக்கு எதிரே முல்லையாறு வளம் சேர்க்கிறது. கோயிலின் கருவறை, சுற்றுச்சுவரும் விமானமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி அன்பர்கள் பலர் இரும்பு கம்பியை துாணாக்கி தற்சமயத்திற்கு இடிபாட்டினை நிறுத்தி வைத்துள்ளனர்.

மகாதேவரை தரிசிப்பவர்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் அணைய போகும் விளக்கின் திரியை தெரியாமல் துாண்டி விட்ட எலி முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததும், தன்வாழ்வின் அந்திம நாள் தெரிந்த ஒருவர் நள்ளிரவில் இடிந்த சிவன் கோயில் திருப்பணியை பற்றி நினைத்த போது அவரின் இறப்பு தர்ம தேவதையால் தள்ளி வைக்கப்பட்ட செய்தி யாவும் திருப்பணியின்

மேன்மையை உணர்த்துகிறது.

இக்கோயில் திருப்பணியில் பங்கு கொண்டு மகாதேவரின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்.

எப்படி செல்வது: மார்த்தாண்டத்தில் இருந்து மாஞ்சாலுமூடு வழியாக 9 கி.மீ.,

விசேஷ நாள்: திங்கள், சிவராத்திரி பவுர்ணமி

நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 90426 37492; 82481 24595

அருகிலுள்ள தலம்: மாலைக்கோடு சாஸ்தா கோயில் 1 கி.மீ., (குலதெய்வ அருள் கிடைக்க...)

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி






      Dinamalar
      Follow us