sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மரண பயம் இனி இல்லை

/

மரண பயம் இனி இல்லை

மரண பயம் இனி இல்லை

மரண பயம் இனி இல்லை


ADDED : மார் 08, 2024 01:49 PM

Google News

ADDED : மார் 08, 2024 01:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதனை அதிகமாக ஆட்டிப்படைப்பது மரண பயம். மனிதனுக்கு வரும் நோய்களுக்கு பயமே காரணம். இப்படிப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். இங்குள்ள எமனை தரிசித்தால் மரணபயம் நீங்கும்.

'எத்தனையோ பதவிகள் இருக்க தனக்கு மட்டும் உயிரை பறிக்கும் பதவியை சிவன் கொடுத்துள்ளாரே' என வருந்தினார் எமன். 'ஸ்ரீவாஞ்சியத்தில் தவமிரு; உன் வருத்தம் தீரும்' என அசரீரி ஒலித்தது. தவமிருந்த அவருக்கு மாசிமாத பரணியன்று காட்சியளித்த சிவன், 'நோய், முதுமை, விபத்து என உயிர் போக பல காரணங்களைச் சொல்வார்களே தவிர இனி யாரும் உன்னை பழிக்க மாட்டார்கள்.

இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசிப்பர்'' என வரம் அளித்தார். பாசக்கயிறு, கதாயுதம், சூலம் ஏந்தி இடக்காலை மடித்தும், வலதுகாலைத் தொங்கவிட்டும் அமர்ந்தபடி இருக்கும் எமனின் அருகில் சித்ரகுப்தன் உள்ளார். எமனுக்கு வடை மாலை சாத்தி ஆயுள் ஹோமம் நடத்துகின்றனர்.

மூலவரான வாஞ்சிநாதேஸ்வரர் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். மங்களநாயகி என்பது அம்மனின் பெயர். 110 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். இங்கு தரிசிப்போருக்கு நுாறு முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும். இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிறன்று நீராடினால் பாவம் தீரும். மாசிமகத் திருவிழாவின் இரண்டாம் நாளில் வாஞ்சிநாதேஸ்வரருடன் எமனையும் தரிசிக்கலாம்.

ஒரு சமயத்தில் மகாவிஷ்ணுவை விட்டு மகாலட்சுமி பிரிந்திருந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு இங்கு சிவனை வழிபட்டு மகாலட்சுமியுடன் சேர்ந்தார். பிரகாரத்தில் பைரவர், வெண்ணெய் விநாயகர், முருகன், சனீஸ்வரர், ராகு, கேது சன்னதிகள் உள்ளன. கிரகணத்தின் போது மூலவருக்கு அபிேஷகம் நடப்பதால் நடை சாத்துவதில்லை.

எப்படி செல்வது

* திருவாரூரில் இருந்து 15 கி.மீ.,

* கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ.,

விசேஷ நாள்: ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94424 03926, 04366 - 291 305

அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜர் கோயில் 15 கி.மீ., (மனநிம்மதி பெற...)

நேரம் : அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 04366 - 242 343






      Dinamalar
      Follow us