
ஜம்மு நகரின் புதிய செயலகம் அருகிலுள்ள சாலிமார் சாலையில் ரன்பிரஷே்வர் என்னும் பெயரில் சிவன் குடிகொண்டிருக்கிறார். இங்குள்ள கருவறையின் இருபுறங்களிலும் ஒன்றேகால் லட்சம் பாண லிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ஜம்முவை ஆட்சி செய்த டோக்ரா வம்ச மன்னர்களில் குலாப்சிங், ரன்பீர்சிங் இருவரும் சிவபக்தர்கள். காசியைப் போல ஜம்மு கோயில் நகரமாக இருக்க வேண்டும் என பல கோயில்களை உருவாக்கினர். இதில் ரன்பிரஷே்வர் கோயில் புகழ் மிக்கது.
ஒருமுறை ரன்பீர்சிங் கனவில் தோன்றி, தனக்கு பிரம்மாண்ட கற்கோயில் ஒன்றைக் கட்ட உத்தரவிட்டார் சிவன். அதன்படி 15 ஆண்டு கட்டப்பட்ட இது 1883ல் திறக்கப்பட்டது. இங்கு மத்திய பிரதேசக் கட்டட பாணியில் கோபுரம் உள்ளது.
கருவறையில் 8 அடி உயர கருங்கல் சிவலிங்கம் கம்பீரமாக காட்சி தருகிறது. அதைச் சுற்றி 18 அங்குல உயரம், 12 அங்குல அகலம் கொண்ட 12 சிவலிங்கங்கள் உள்ளன. இது தவிர ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளது. கருவறையின் இருபுறத்திலும் 1,25,000 பாண லிங்கங்கள் மரப்பலகைகளில் பதிக்கப்பட்டுள்ளன. இவை நர்மதா நதியில் சேகரிக்கப்பட்டவை.
பார்வதி, கணஷே், 100 கி.கி., எடையுள்ள பித்தளை நந்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், காளி, கார்த்திகேயர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. பிற்காலத்தில் ஸ்ரீராமர், சனிபகவான் சன்னதிகள் அமைக்கப்பட்டன. காலை நடக்கும் சிவாஜி ஆரத்தியும், மாலையில் நடக்கும் சிவசங்கர்ஜி ஆரத்தியும் சிறப்பானதாகும். தலவிருட்சமாக சினார், அரசமரம் உள்ளன.
சிரவணமாதம் என்னும் ஆவணியில் இக்கோயிலை தரிசித்தால் விரைவில் விருப்பம் நிறைவேறும்.
கிழக்கு, மேற்கில் வாசல்கள் கொண்ட இக்கோயிலின் பிரகாரத்தில் சிவன் திருவிளையாடல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கோயில் எதிரிலுள்ள நுாதன மண்டபத்தில் சிவனை பூஜித்தநிலையில் மன்னர் ரன்பீர்சிங் சிலை உள்ளது. சலவை கல்லால் ஆன சிவன், பார்வதி சிலைகளும் இங்குள்ளன.
எப்படி செல்வது: ஜம்மு கத்ராவில் இருந்து 42 கி.மீ.,
விசஷே நாள்: நவராத்திரி, சிவராத்திரி, ஸ்ரீராமநவமி.
தொடர்புக்கு: 0194 - 250 2274
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
அருகிலுள்ள தலம்: ரனபரேஸ்வர் கோயில் 1 கி.மீ., (விபத்தை தடுக்க...)
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி