sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உன்னால் எல்லாம் முடியும் என நம்பு! அனைத்தையும் சாதித்துக் காட்டுவாய்!

/

உன்னால் எல்லாம் முடியும் என நம்பு! அனைத்தையும் சாதித்துக் காட்டுவாய்!

உன்னால் எல்லாம் முடியும் என நம்பு! அனைத்தையும் சாதித்துக் காட்டுவாய்!

உன்னால் எல்லாம் முடியும் என நம்பு! அனைத்தையும் சாதித்துக் காட்டுவாய்!


ADDED : ஜூன் 29, 2017 02:13 PM

Google News

ADDED : ஜூன் 29, 2017 02:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்

* 'உன்னால் எல்லாம் முடியும்' என நம்பினால், அனைத்தையும் சாதித்துக் காட்டுவாய்.

* இயற்கை சீற்றம் கண்டு அஞ்சாதே. அதை வெல்லவே நீ இந்த உலகில் பிறந்திருக்கிறாய்.

* நல்ல வழியில் பணம் சம்பாதித்து, சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் தொண்டு செய்வதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.

* ஓயாமல் உழைத்திடு. உலகில் தோன்றியதற்கு அறிகுறியாக ஏதேனும் நல்ல அடையாளத்தை விட்டுச் செல்.

* நம்பிக்கை, நேர்மை, பக்தி இருக்கும் வரை உன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

* சென்றதை எண்ணிக் கவலைப்படாதே. எதிர்காலத்தை எண்ணி மயங்காதே. நிகழ்காலத்தில் தீவிர கவனம் செலுத்து.

* சுயநலம் இல்லாத அனைத்தும், நல்லொழுக்கம். சிறிது கலந்து விட்டாலும் தீயொழுக்கமாகி விடும்.

* மனதால் விரிந்திடு. வளர்ச்சியடைவதே உயிர் வாழ்வதன் ஒரே அடையாளம் என்பதை நினைவில் கொள்.

* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதை பின்தொடர்ந்திடு. கோழையாகவும், கபடதாரியாகவும் இருப்பது கூடாது.

* தோல்வியைக் கண்டு துவளாதே. வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பமுடன் ஏற்றுக் கொள்.

* சிறிய எறும்பும், வானுலக தேவ தூதனும் என்னைப் பொறுத்த வரை ஒன்று தான். ஒவ்வொன்றும் அதனதன் நிலையில் பெருமை உள்ளதே.

* எப்போதும் இனிமையும், புன்னகையும் கொண்டவனாக இரு. அதுவே உன்னைக் கடவுளின் அருகில் கொண்டு சேர்க்கும்.

* கோபத்திற்கு அடிமையாக இருப்பவன் உண்மையான சுதந்திரத்தை வாழ்வில் உணர முடியாது.

* பிறருடைய பாராட்டு, பழிச்சொல் குறித்து சிந்திக்கத் தொடங்கினால் உன்னால் சாதிக்க முடியாது.

* இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவை மூன்றுமே முன்னேறுவதற்கு அவசியமானவை.

* உடல், மனம் இரண்டையும் பலவீனப்படுத்தும் எதையும் கனவிலும் நினைக்காதே. சோம்பேறித்தனத்தை எப்பாடுபட்டாவது துரத்திவிடு.

* மனதில் எழும் தீய எண்ணத்துடன் போரிட்டு வென்றால் அமைதி உண்டாகும்.

* அனைவரும் கடவுளின் அன்புக்குழந்தைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமையும், மன உறுதியும் நமக்குள் இருக்கிறது.

முழங்குகிறார் வீரத்துறவி






      Dinamalar
      Follow us