ADDED : செப் 17, 2012 10:33 AM

ராமநாதபுரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கிடைத்த கல்லை, திருவிதாங்கூர் மன்னர் வீரகேரளவர்மா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் ஒரு அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தற்போது ஒன்றரை அடி உயரமுள்ள இந்த விநாயகர், ஆரம்பத்தில் அரை அடி அளவே இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரை நிறம் மாறும் விநாயகர் என்கின்றனர்.
தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலத்தில் கருப்பு நிறமாகவும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கருப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து சிறிது சிறிதாக நிறம் மாறி முழுமையாகக் கருப்பாகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி (சிலை) உருவாக்கப்பட்ட கல் சந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 - 10, மாலை 4 - இரவு 7.
இருப்பிடம்:
நாகர்கோவிலிலிருந்து 18 கி.மீ. , தக்கலை மகாதேவர் கோயில் அருகில்.