/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சூரியன் வழிபட்ட உப்பூர் விநாயகர்
/
சூரியன் வழிபட்ட உப்பூர் விநாயகர்
ADDED : செப் 17, 2012 10:32 AM

பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக்கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார்.
விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன.
திறக்கும் நேரம்:
காலை 6 -11, மாலை 4 - இரவு 8 .
இருப்பிடம்:
மதுரை அல்லது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்று அங்கிருந்து 15 கி.மீ., சேதுகடற்கரை சாலையில் சென்றால் உப்பூர்.