sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதூர் வாங்க!

/

திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதூர் வாங்க!

திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதூர் வாங்க!

திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதூர் வாங்க!


ADDED : ஏப் 22, 2021 04:34 PM

Google News

ADDED : ஏப் 22, 2021 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாதக ரீதியாக கிரகநிலை உங்களுக்கு சரியில்லையா... திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடுகிறதா... உங்களுக்கு நல்ல தீர்வு தரக் காத்திருக்கிறார் திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி.

இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் ஒருமுறை வேட்டையாடச் சென்றார். அவர் எய்த அம்பு துளைத்த மான், அருகில் இருந்த மருத மரத்திற்குள் சென்று மறைந்தது. மன்னர் அங்கு பார்த்த போது மான் சிவலிங்கமாக மாறியிருந்தது. அதிசயம் கண்ட மன்னர் சிவன் கோயில் எழுப்பி வழிபட்டார். நாறும்பூநாதர் என சுவாமிக்கு பெயர் உண்டானது. கருவூர் சித்தர் இங்கு வந்த போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடியது. இதனால் மறுகரைக்குச் செல்ல முடியவில்லை. எனவே கரையில் நின்றபடியே சிவனை நினைத்து பாடினார். அதை ரசிக்க விரும்பிய சிவன், தனது இடது காதில் கை வைத்தபடி ஒருபுறம் சாய்வாக திரும்பினார். ''என்னை மனதில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக'' என சிவன் கட்டளையிட்டார். கருவூராரும் ஆற்றைக் கடந்து தரிசனம் செய்தார். பின்பு சித்தர், ''சுவாமி.. வருங்காலத்திலும் இங்கு நிரந்தரமாக தங்கியிருந்து பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டினார். சிவனும் வேண்டுகோளை ஏற்றார். இங்குள்ள கோமதியம்மன் உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்ச திருமேனி கொண்டவராக இருக்கிறார்.

இக்கோயிலில் ஏப்.24ல் மகாபிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கிறது. அப்போது ராஜ கோபுர திருப்பணிக்கான வேண்டுதல் விழாவை மகாராஷ்டிரா ஷேகான் ஸ்ரீகஜானன் மஹராஜ் ஆசியுடன் பக்தர்கள் நடத்தவுள்ளனர். புதிய முயற்சியாக கோயிலின் தலவரலாற்றை ஒரு காட்சியாக கலை இயக்குநரின் கை வண்ணத்தில் உருவாக்க உள்ளனர்.

பிரதோஷ பூஜையில் மாலை 4:30 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது சுவாமி, அம்மன், நந்திகேஸ்வரருக்கு 3,024 செவ்விளநீர் அபிஷேகம் நடக்கும்.

பின்னர் செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை பூக்களால் சுவாமி, அம்மனை அலங்காரம் செய்வர். மாலை 5:30 மணிக்கு 31 விளக்குகளுக்கு ஒருநபர் வீதம் 324 நபர்கள் கோயில் முழுவதும் 10,008 விளக்குகளை ஒரே நேரத்தில் ஏற்றுவர். சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூன்று முறை 10,008 தீப ஒளிக்கு நடுவில் பவனி வருவர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் தோஷம் விலகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை பேப்பரில் எழுதி வந்து சுவாமி சன்னதியில் இருந்து கீழே இறங்கும் வழியில் உள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தலாம்.

வீரவநல்லார், முக்கூடலில் இருந்து கோயிலுக்குச் செல்ல மதியம் 2:00 மணி முதல் இலவசப் பேருந்து இயக்கப்படுகிறது.

எப்படி செல்வது: திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ., துாரத்தில் வீரவநல்லுார். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ.,

விசேஷ நாள்: ஆனி உத்திரம், ஆடிப்பூரம், தைப்பூசம் பிரம்மோற்ஸவம்

நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 78250 62109

அருகிலுள்ள தலம்: சேரன்மாதேவி அம்மைநாதர் கோயில் (12 கி.மீ.,)

நேரம்: காலை 7:30 - 10:00 மணி; மாலை 5:00 - 6:00 மணி

தொடர்புக்கு: 04634 - 265 111, 94422 26511






      Dinamalar
      Follow us