ADDED : அக் 14, 2020 09:18 AM

* விடாமுயற்சியால் கெடுதலான விதியையும் மாற்ற முடியும்.
* உழைப்பவன் வருந்தினால் உலகம் அழிந்து விடும்.
* நன்கு கற்றவர்களிடமும் அறியாமை இருக்கும்.
* சொல்வது எளிது. அதை பின்பற்றுவது கடினம்.
* முடியாத செயலையும் முடிப்பவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர்.
* ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் அழிந்து விடும்.
* அன்பு இருந்தால் தான் உயிருள்ளதாக பொருள். இல்லாவிட்டால் வெறும் எலும்பும், தோலும்தான்.
* பணிவும், இன்சொல்லுமே ஒருவனுக்கு அழகைத் தரும்.
* மனதால் தவறு செய்ய நினைப்பதும் கூட தீமையானது.
* திருடி சேர்த்த பணம் வளர்வது போல் இருந்தாலும் முடிவில் அழியும்.
* ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர்.
* மனதில் குற்றம் இல்லாமல் வாழ்வதே சிறந்த அறம்.
* இல்லாதவர்க்கு தருவதே சிறந்த கொடை.
* முயற்சி இருப்பவனிடம் செல்வம் பெருகும்.
* பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள் தப்பிக்க முடியாது.
* அருள் ஒன்றே செல்வங்களில் சிறந்த செல்வம்.
* பொருள் இல்லாதவருக்கு உலக வாழ்வு துன்பம் தரும்.
* அருள் இல்லாதவருக்கு வானுலக வாழ்வு கிடைக்காது.
* பொருள் இழந்தவர்களும் ஒருநாள் பொருள் வளம் அடைவார்கள்.
* தெய்வத்தின் அருளால் கைகூடாமல் போனாலும் செய்யும் முயற்சி கூலிதரும்.
* குறைவாக உண்பவரிடம் இன்பம் நீங்காமல் நிற்கும்.
* அதிகமாக உண்பவரிடம் நோய் நிலைத்து நிற்கும்.
விளக்குகிறார் திருவள்ளுவர்